பாஸ்டேக் பாஸ் 2025 – எப்படி பதிவு செய்வது? தேவையான ஆவணங்கள்? முழு விபரம்

Published : Aug 20, 2025, 09:38 AM IST

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு, ஃபாஸ்ட் டேக் பாஸ் 2025 ஒரு வரப்பிரசாதம். கட்டணச் சாவடிகளில் நிற்காமல் பயணிக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும் இந்தப் புதிய திட்டம் உதவுகிறது.

PREV
15
பாஸ்டேக் பாஸ் திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் (NH) பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறை கட்டணச் சாவடியில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே கட்டணம் செலுத்தும் வகையில் ஃபாஸ்ட் டேக் பாஸ் 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம், இதுவரை வணிக வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதைப் போல இல்லாமல், இப்போது தனியார் கார், ஜீப், வேன் போன்ற வாகன உரிமையாளர்களுக்கும் கிடைக்கிறது. 2014-ஆம் ஆண்டிலேயே அறிமுகமான FASTag, RFID தொழில்நுட்பத்தின் மூலம் பணமில்லா கட்டணத்தை எளிதாக்குகிறது.

25
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் பதிவு

ஆண்டு பாஸ் வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகள் உள்ளன. ஒவ்வொரு சாவடியிலும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய சிரமம் குறையும். அதேசமயம் பயணிகளின் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் வாகன உரிமையாளர்களுக்கு சேமிப்பு தருவதோடு, அரசின் வரவையும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், சாலையில் குவியும் நெரிசல் குறைந்து, பயணிகள் விரைவாக செல்லும் வகையிலும் இது உதவுகிறது.

35
பாஸ்டேக் நெடுஞ்சாலை பயணம் சலுகை

இந்த பாஸ் பெற ரூ3,000 கட்டணம் செலுத்த வேண்டும். இது ஒரு வருடம் அல்லது 200 முறை பயணம் செய்யும் வரையிலும் செல்லுபடியாகும். 200 முறை பயணிக்கவோ அல்லது ஒரு வருடம் முடிந்தவுடன், அந்த FASTag முறைக்கு மாறிவிடும். மீண்டும் இரண்டு பாஸ் பெற வேண்டும், அதே வழியில் மீண்டும் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பாஸ், தேசிய நெடுஞ்சாலைகள் (NH) மற்றும் தேசிய விரைவுச்சாலைகள் (NE) கட்டணச் சாவடிகளில் மட்டுமே செல்லுபடியாகும்.

45
பாஸ்டேக் பாஸ் ஆவணங்கள்

பாஸ் பெறுவதற்கு சில விஷயங்கள் அவசியம். அவை என்னவென்று வரிசையாக பார்க்கலாம். வாகனத்தின் RC புத்தகம், உரிமையாளரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அடையாள ஆவணங்கள் (ஆதார், வாக்காளர்கள் அட்டை, PAN) மற்றும் முகவரி சான்றிதழ் ஆகியவை தேவை. FASTag, வெறும் சேஸ் எண் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த பாஸ் வழங்கப்படாது. எனவே, வாகன பதிவு எண் (VRN) சரியாக புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

55
பாஸ்டேக் பாஸ் எப்படி எடுப்பது

பாஸ்டேக் (FASTtag) பாஸ் 2025-ஐ, RajmargYatra ஆப் அல்லது NHAI இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து செயல்படுத்தலாம். கட்டணம் செலுத்திய 2 மணி நேரத்திற்குள் பாஸ் இயங்கத் தொடங்கும். ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், 24x7 இயங்கும் 1033 ஹெல்ப்லைன் எண்-க்கு தொடர்புகொண்டு தீர்வு பெறலாம். இந்த திட்டம், அடிக்கடி செல்லும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories