Cancel பட்டனை இரண்டு முறை அழுத்தினால் PIN பாதுகாப்பாக இருக்குமா? உண்மை என்ன?

Published : Aug 19, 2025, 07:57 PM IST

சமூக வலைத்தளங்களில் பரவும் ஏடிஎம் கேன்சல் பட்டன் மோசடியைத் தடுக்கும் தகவல் உண்மையா? ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் ஏடிஎம் பின்னைப் பாதுகாக்க சரியான வழிகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

PREV
16
ஏடிஎம் பாதுகாப்பு டிப்ஸ்

சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎம்-ல் பணம் எடுத்து முடித்த பின் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்தினால், உங்கள் ஏடிஎம் பின் பாதுகாப்பாக இருக்கும் என்ற தகவல் வைரலாக பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மையா? என்பதை பார்க்கலாம்.

26
ஏடிஎம் மோசடிகள்

ஏடிஎம்-கள் வந்ததால் வங்கி செல்லும் சிரமம் குறைந்தாலும், அதே நேரத்தில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஸ்கிம்மிங் (Skimming), பிஷிங் (Phishing), கீபேட் டேம்பரிங் (Keypad Tampering) போன்ற முறைகள் மூலம் குற்றவாளிகள் ATM கார்டு விவரங்கள் மற்றும் PIN எண்களையும் திருடி பணத்தை பறித்து வருகின்றனர். ஒரு சிறிய தவறே கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

36
மோசடி தடுப்பு வழிகள்

ஏடிஎம்-கள் வந்ததால் வங்கி செல்லும் சிரமம் குறைந்தாலும், அதே நேரத்தில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஸ்கிம்மிங் (Skimming), பிஷிங் (Phishing), கீபேட் டேம்பரிங் (Keypad Tampering) போன்ற முறைகள் மூலம் குற்றவாளிகள் ATM கார்டு விவரங்கள் மற்றும் PIN எண்களையும் திருடி பணத்தை பறித்து வருகின்றனர். ஒரு சிறிய தவறே கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

46
எப்படி ATM PIN-ஐ பாதுகாப்பது?

பணம் எடுக்கும் முன், ஏடிஎம் இயந்திரத்தின் கார்டு ஸ்லாட், கீபேட், மற்றும் மேஷின் மீது ஏதேனும் அசாதாரண சாதனம் பொருத்தப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். சந்தேகமான ஏதாவது கண்டால், அந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்தாமல் உடனே வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும்.

56
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிகள்

உங்கள் ATM PIN-ஐ 3–6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். பிறந்த தேதி, 1234, 1111 போன்ற எளிய எண்களை தவிர்க்கவும். SMS / மின்னஞ்சல் அலர்ட் சேவையை இயக்கி வையுங்கள். சந்தேகமான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனே கவனிக்கலாம். கார்டு தொலைந்தால் உடனே Block செய்யவும். ஏடிஎம்-ல் கார்டு சிக்கிக் கொண்டால் அல்லது பிழை ஏற்பட்டால், அங்கு இருக்கும் அந்நியர்களிடம் உதவி கேட்காமல் நேரடியாக வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.

66
உண்மை நிலவரம்

இந்த வதந்தியை PIB Fact Check அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. RBI-யும் எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை. உண்மையில், ATM-இல் இருக்கும் ரத்து பட்டன், ஒரு பரிவர்த்தனையை ரத்து செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அந்த மோசடிகளைத் தடுக்க முடியாது. எனவே இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

Read more Photos on
click me!

Recommended Stories