15-15-15 ஃபார்முலா தெரியுமா? வேகமாக ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க இதை ட்ரை பண்ணுங்க!

First Published | Nov 14, 2024, 10:49 AM IST

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியைத் திரட்ட 15-15-15 ஃபார்முலாவை பயன்படுத்தலாம். இது திட்டமிடப்பட்ட நீண்ட கால SIP முதலீட்டின் மூலம்  பணத்தைப் பெருக்கும் வழியாகும்.

Mutual funds

கடந்த சில ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பணத்தைப் பெருக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதை AMFI இன் அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிசெய்கின்றன. ஃபோலியோக்கள் மற்றும் சொத்துக்களின் எண்ணிக்கை (AUM) அதிகரித்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன.

Mutual fund investment

சந்தையில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் இருப்பதால், முதலீட்டில் உள்ள ரிஸ்க்கைப் பொறுத்து குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீட்டாளர்கள் தேர்வு செய்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. ரிஸ்க்-எடுக்கும் திறனுக்கு ஏற்ப ஃபண்டுகளை தேர்வு செய்வதற்கான வசதியும் உள்ளது.

Tap to resize

Mutual fund tips

பங்குச்சந்தை தொடர்புடைய சில ரிஸ்குகளை எடுக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF),  தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), பிக்ஸட் டெபாசிட் (FD) போன்ற பாரம்பரிய சேமிப்புத் திட்டங்களை விட, மியூச்சுவல் ஃபண்டு முதலீடு முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கும்.

Equity Funds

மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் வெறும் 500 ரூபாய் முதல் முதலீட்டைத் தொடங்கலாம். பிற்கு வருமானம் அதிகரிப்பதைப் பொறுத்து காலப்போக்கில் முதலீட்டையும் அதிகரிக்கலாம். இதன் மூலம் நீண்ட கால முதலீட்டில் கணிசமான கார்பஸை உருவாக்கலாம். உதாரணமாக, மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்க நினைத்தால், சில நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கடந்தகால செயல்திறனை மதிப்பிட வேண்டும்.

15-15-15 rule for investment

ஈக்விட்டி ஃபண்டுகளில் 15% வருடாந்திர வருவாய் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், ரூ. 1 கோடி என்ற இலக்கை அடைய 15 ஆண்டுகளுக்கு SIP முறையில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டுத் திட்டம் 15-15-15 விதி என்று முதலீட்டாளர்கள் மத்தியில் அறியப்படுகிறது.

15-15-15 SIP Investment formula

15 ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் மாதம்தோறும் ரூ.15,000 முதலீடு செய்து, ரூ.1 கோடி ஃபண்ட் போர்ட்ஃபோலியோ பெற்ற பிறகு, மேலும் 15 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடரலாம். அடுத்த 15 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் 10 கோடி ரூபாயாக மாறிவிடும். 15x15x15 விதியைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக முதலீடு செய்யும்போது நீங்களும் ஒரு கோடீஸ்வரராக உருவெடுக்கலாம். அதுவும் அடுத்த 15 ஆண்டுகளில்!

Latest Videos

click me!