அகர்பத்தி தயாரிப்பில் அசத்தல் வருமானம் - மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம் ஈசியா!

Published : Jun 03, 2025, 10:32 AM IST

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்களில் ஊதுபத்தி தயாரிப்பும் ஒன்று. வீட்டிலேயே எளிதாகத் தொடங்கி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பதால், நல்ல லாபம் ஈட்டலாம்.

PREV
19
கொட்டிக்கொடுக்கும் சொந்த தொழில்

எல்லோருமே சொந்தமாக தொழில் செய்து லாபம் ஈட்டிவிட முடியாது. அதற்கும் திறமை, தொழில் அறிவு, சந்தை வாய்ப்பு, தேவை போன்ற பல்வேறு விஷயங்களில் போதுமான புரிதல் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி வெற்றிபெறமுடியும். வசதி படைத்தவர்கள் மட்டுமே சொந்தமாக தொழில் செய்ய முடியும் என்று இல்லை. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் கூட சிறு முதலீட்டில் தொழில் தொடங்கி அசத்தலாம். அதற்கு நிறைய குடிசைத் தொழில்கள் உள்ள நிலையில், அதில் ஒரு முக்கியான தொழில் தான் ஊதுவத்தி தயாரிக்கும் தொழில்.

29
லாபத்தை அள்ளிக்கொடுக்கும் அகர்பத்தி

குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை கொடுக்கும் முதல் 10 தொழில்களில் அகர்பத்தி தயாரிப்பு தொழிலும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தையும், 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் கொண்டுள்ள இந்த தொழிலை தொடங்க லட்சக்கணக்கான ரூபாய் பணமோ, பெரிய இடமோ தேவையில்லை. வீட்டு முற்றம் அல்லது வராண்டாவின் ஒரு பகுதி ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவையே அகர்பத்தி தயாரிப்பிற்கு தேவை என்றால் அது மிகையல்ல.

39
உள்நாட்டு தேவையும் வெளிநாட்டு தேவையும்

கிரமப்பகுதிகளில் பெண்களால் தயாரிக்கப்படும் அகர்பத்திக்கான தேவை உள்நாட்டில் மட்டுமல்லாமல் இல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக அளவில் உள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் அகர்பத்திகள் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சர்வதேச நாடுகளின் அகர்பத்தி தேவையை அதிக அளழில் பூர்த்தி செய்து இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆன்மீகத்திலும் கடவுள் வழிபாடுகளிலும் ஈட்படுவோர் எண்ணிக்கை அதிகம். இதனால் அகர்பத்தி, தூபம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் தேவையும் இந்தியாவில் அதிகம் என்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அதே அளவுக்கு உள்நாட்டிலும் தேவை உள்ளது.

49
சிறிய தாயாரிப்பு பெரிய வருமானம்

ஊதுபத்தி தயாரிப்பில் என்ன வருமானம் கிடைத்துவிடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஊதுபத்தியின் தேவையானது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் இருக்கிறது. பூஜை அறைகள் இல்லாத வீடுகள் குறைவு. அதுவும் ஊதுபத்தி இல்லாத பூஜையும் இல்லை. எனவே ஊதுபத்துக்கு எப்போதுமே தேவை அதிகமாக இருக்கும். மிக எளிமையான முறையில் வீட்டிலேயே ஊதுபத்தி உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்ட முடியும்.

59
தேவையான பொருட்கள்

சந்தனம், வாசனை திரவியம், வெட்டி வேர், கருவாப் பட்டை, கோரைக் கிழங்கு, சந்தன பவுடர், அடுப்பு கரி, கருவா பிசின் அல்லது வெல்லக் கரைசல், பொட்டாசியம் நைட்ரேட், மூங்கில் குச்சி, ஊதுபத்தி செய்யும் இயந்திரம் போன்ற பொருட்கள் தேவை. இவற்றை சரியான விகிதத்தில் கலந்து கிடைக்கும் பேஸ்ட்டை கொண்டு அகர்பத்தி தயாரிக்கலாம்.

69
தயாரிப்பு முறை

சந்தனக்கட்டை, கருவாப் பட்டை, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, சந்தன பவுடர் மற்றும் அடுப்புக்கரி ஆகிய பொருட்களை தனித்தனியாக நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பு கரித்தூளுடன் சிறிது பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பொட்டாசியம் நைட்ரேட் கரித்தூள் அணையாமல் தொடர்ந்து எரிய உதவும். அதேபோல் காற்றில் நெருப்பு அணைந்து விடாமல் இருக்கவும் இது உதவுகிறது. பின்னர், கரித்தூளுக்கு நிகரான அளவுள்ள மூலிகை பொருட்களை எடுத்து அதனுடன் வெல்ல நீர்கரைசல் அல்லது கருவா பிசின் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இக்கலவையை இயந்திரத்தில் கொட்டி மூங்கில் குச்சிகளை சரியான இடத்தில் பொருத்தி இயந்திரத்தை இயக்க வேண்டும். இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் ஊதுபத்திகளை எடுத்து நிழலில் உலர வைக்க வேண்டும். உலர்ந்த ஊதுபத்திகளை எடுத்து பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

79
ஏற்றுதி வாய்ப்பு

இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட ஊதுபத்தியானது இயற்கை மூலிகைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் நம் உடல் நலத்திற்கும், சுற்றுபுறத்திற்கும் நன்மை விளைவிக்கும். இதற்கான தேவையும் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் உற்பத்தி செய்து இவற்றை ஏற்றுமதியும் செய்யலாம். உள்ளூர் கடைகளும் விற்பனை செய்யலாம். சந்தை வாய்ப்புகளும் அதன் வாயிலாக வருமானமும் அதிகம் கிடைக்கும்.

89
மணக்க மணக்க வியாபாரம்

பண்டிகைகளின் போது தேவை அதிகரிக்கிறது. இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில், மாதம் தோறும் ஏதாவது ஒரு பண்டிகை இருந்துகொண்டே இருக்கிறது. ஆகையால் தூபம் குச்சிகளுக்கான தேவை ஆண்டின் முழுக்கும் நிலைத்திருக்கிறது. ஆனால், பண்டிகை காலங்களில் அதன் பயன்பாடு அதிகரிக்கிறது. நீங்கள் தூபம் குச்சிகளில் புதுமையான, வித்தியாசமான மணங்களை அறிமுகப்படுத்தினால், உங்கள் பிராண்ட் எளிதாக விற்பனை சந்தையில் தனியிடத்தை பிடிக்கக்கூடும். இந்த தொழிலத்தை தொடங்க பெரிய இடம் தேவையில்லை. உங்கள் வீட்டில் உள்ள ஒரு காலியான அறை, ஹால் அல்லது காரேஜில் கூட இதை ஆரம்பிக்கலாம். இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சிறிய இடத்தில் அமைத்து, வேலைத் தொடங்க முடியும். வாடகை செலவை சேமிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

99
மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்

நீங்கள் இதைப் சிறிய அளவில் துவக்க விரும்பினால், ஆரம்ப முதலீடு சுமார் ₹40,000 முதல் ₹80,000 வரை இருக்கும். இதற்காக, உள்நாட்டு வர்த்தக உரிமம் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரம் துவங்கிய பிறகு, நீங்கள் மாதம் ₹1.5 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். இதிலிருந்து, உங்கள் இலாபம் சுமார் ₹50,000 முதல் ₹60,000 வரை இருக்கும். உங்கள் தயாரிப்புக்கு தேவை அதிகரித்தால், வருமானமும் லட்சங்களை எட்டும் வாய்ப்பு உள்ளது. இது குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் சிறந்த உதாரணமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories