Indian Railway: ரயிலில் சார்ட் போட்ட பிறகும் கன்பார்ம் டிக்கெட் பெறுவது எப்படி? சூப்பர் டிரிக்ஸ்!

Published : Sep 24, 2026, 07:12 AM IST

Indian Railway: ரயிலில் சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகும் இனி எளிதில் டிக்கெட் கிடைக்கும். சார்ட் போட்ட பிறகும் எப்படி டிக்கெட் புக் செய்வது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
14
சார்ட் போட்ட பிறகு எப்படி டிக்கெட் புக் செய்வது?

ஐ.ஆர்.சி.டி.சி கரண்ட் புக்கிங் (IRCTC Current Booking) வசதி கடைசி நேர ரயில் பயணங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. ரயிலின் சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகு டிக்கெட் கிடைப்பது முற்றிலும் சாத்தியமற்றது என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், முன்பதிவுப் பட்டியல் வெளியான பின்னரும் கூட ரயில்களில் சில பெர்த்கள் காலியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதுதான் உண்மை.

இந்த காலியிடங்களைக் கண்டறிந்து ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலம் எளிதாக டிக்கெட் பெறலாம். ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் இந்த வசதிக்கு, தட்கல் முறையில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் ஏதுமில்லை. சாதாரண கட்டணத்திலேயே கன்பார்ம் டிக்கெட்டுகளை பெற முடியும்.

24
ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் தேடும் முறை

உங்கள் மொபைலில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி ரயில் கனெக்ட் (IRCTC Rail Connect) செயலியைத் திறந்து, அதில் 'Train' என்ற பகுதிக்குச் செல்லுங்கள். அங்கு 'Chart Vacancy' என்றொரு தனித் தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்தவுடன் காலியிடங்களைத் தேடுவதற்கான புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

அந்தப் பக்கத்தில் நீங்கள் பயணிக்கத் திட்டமிட்டுள்ள ரயிலின் பெயர் அல்லது எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதோடு, பயணத் தேதி மற்றும் நீங்கள் ரயிலில் ஏறப்போகும் நிலையம் (Boarding Station) ஆகிய விவரங்களையும் சரியாகக் குறிப்பிட வேண்டும். இந்தத் தகவல்களை அளித்தவுடன், குறிப்பிட்ட ரயிலில் எந்தெந்தப் பெட்டிகளில் (Coaches) எந்தெந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்ற முழு விவரமும் திரையில் தோன்றும்.

34
பயண தூரமும் இருக்கை ஒதுக்கீடும்

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். திரையில் காட்டும் ஒரு காலி இருக்கை, ரயிலின் தொடக்க நிலையத்திலிருந்து கடைசி நிறுத்தம் வரை முழுமையாகக் காலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே மட்டுமே அந்த இருக்கை காலியாக இருக்கக்கூடும்.

வழித்தடக் கட்டுப்பாடுகள் உள்ளதால், நீங்கள் செல்ல வேண்டிய தூரத்திற்கு அந்த குறிப்பிட்ட இருக்கை காலியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் பயணத் தேவைக்கு ஏற்ற இருக்கை இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகு, அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். இது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

44
கன்பார்ம் டிக்கெட் பெறுவது எப்படி?

காலியிடத்தை உறுதி செய்த பின், செயலியிலேயே 'Current Booking' பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு பயணிகளின் விவரங்களைப் பதிவு செய்து, வழக்கமான முறையில் ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய சில நிமிடங்களிலேயே உங்களுக்கான கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்துவிடும்.

ரயில்வே விதிகளின்படி, சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள இருக்கைகள் அனைத்தும் 'கரண்ட் புக்கிங்' முறை மூலம் மட்டுமே பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும்; காத்திருப்போர் பட்டியல் கிடையாது. இனி கடைசி நேரப் பயணங்களின் போது தட்கல் கட்டணம் இன்றி, இந்த எளிய வழிமுறையைப் பயன்படுத்தி ரயிலில் இருக்கைகளைக் கண்டறிந்து பயணிக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories