உங்கள் செல்போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள யுபிஐ ஐடியை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நமது கையில் செல்போன் இருந்தால் உலகத்தையே கையில் வைத்திருப்பது போன்ற நிலைமை வந்துவிட்டது. முன்பெல்லாம் வங்கியில் கால் கடுக்க நின்று செல்லான் எழுதி கொடுத்து பணத்தை வங்கி கணக்கில் அனுப்பிய காலம் மாறிப்போய் தற்போது வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. யுபிஐ வசதியால் வங்கிக்கு செல்லாம் எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் எந்த சிரமமின்றி பணம் அனுப்பி வருகின்றனர்.
25
UPI Details
ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் அக்கோவுண்ட் இல்லாமலே வேறும் செல்போன் எண்ணை வைத்தே அடுத்த நொடியே பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பி விட முடியும். அதேபோன்று ரீசார்ஜ், மின் கட்டணம் ஆகிவற்றை செலுத்தலாம். தற்போது கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை வழங்கும் செயலிகள் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது.
35
UPI Temporarily Block
இந்த சூழலில் நம்முடைய மொபைல் போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பாட்டாலோ நம்முடைய முக்கியமான யுபிஐ விவரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து வரக்கூடும். திருடப்பட்ட மொபைல் போன்களிலிருந்து யுபிஐ விவரங்களை பயன்படுத்தி பலரின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்படுகிறது. ஆகவே உங்கள் மொபைல் போன் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டால் நாம் முக்கியமாக செய்யவேண்டியது யுபிஐ ஐடியை பிளாக் செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
45
UPI Deactivate
யுபிஐ பின்னை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்
வங்கி கணக்கு சேவைகள் முடக்கப்பட்டால் அடுத்து திருடிய நபர்கள் உங்களுடைய யுபிஐ செயலிகளுக்கு சென்று பணம் திருட வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்த உடன் உங்களுடைய யுபிஐ கணக்கை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தடுக்க முடியும்.
55
Google Pay
கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகள் கணக்கை முடக்க வேண்டும்
உங்கள் மொபைல் போனில் கூகுள் பே வைத்திருந்தால் 1-800-419-0157 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை கொடுத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். போன் பே-யில் 0806-8727-374 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பேடிஎம் யூசர் என்றால் 0120-04456-456 -என்ற எண்ணை அழைக்க வேண்டும். சேவை அதிகாரிகளிடம் தேவையான தகவல்களை உறுதி செய்த பிறகு உடனடியாக யுபிஐ ஐடியை பிளாக் செய்து விடுவார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.