சரியான நிதித் திட்டமிடலும் முதலீட்டு ஒழுக்கமும் இருந்தால், சாமானியர்களும் 16 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேர்த்து கோடீஸ்வரர் ஆவது சாத்தியமே. அதற்கான ரகசியங்கள் இதோ!
நம்மில் பலருக்கு "நிறைய சம்பாதிக்கிறோம், ஆனால் கையில் பணம் தங்கவில்லையே" என்ற ஆதங்கம் உண்டு. பணக்காரர் ஆவது என்பது ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அல்ல; அது ஒரு முறையான பழக்கம். வெறும் கடின உழைப்பு மட்டும் போதாது, அந்த உழைப்பின் பலனை எப்படித் தக்கவைக்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. 16 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 1 கோடி அதிபதியாவதற்கான 5 ரகசியங்கள் இதோ.
27
ரகசியம் 1: கடனை 'வியூகம்' அமைத்து உடையுங்கள்
வருமானத்தில் 30%-க்கு மேல் இ.எம்.ஐ (EMI) கட்டுபவர்கள் ஒருபோதும் பெரிய சொத்துக்களைச் சேர்க்க முடியாது. முடிந்தவரை பழைய கடன்களை விரைவாக அடைக்கப் பாருங்கள். கடனில் இருந்து வெளிவந்தால் மட்டுமே உங்கள் முதலீடு வேகமாக வளரும்.
37
ரகசியம் 2: உங்கள் வருமானத்தின் 'ஓட்டைகளை' அடையுங்கள்
உங்கள் வருமானத்தை ஒரு வாளியில் இருக்கும் நீராக நினையுங்கள். வாளியில் ஓட்டை இருந்தால் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் நிறையாது. உங்கள் செலவுகளைக் கண்காணிக்க 3 வங்கி கணக்குகள் முறையைப் பின்பற்றுங்கள்.
வருமான கணக்கு: சம்பளம் வரும் கணக்கு.
செலவு கணக்கு: வாடகை, மளிகை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும்.
முதலீடு கணக்கு: இதில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கக் கூடாது.
ரகசியம் 3: சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கண்டு அஞ்சாதீர்கள்
பங்குச்சந்தை குறுகிய காலத்தில் ஏறும், இறங்கும். இதைப் பார்த்து பயந்து முதலீட்டை நிறுத்தக் கூடாது. ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரைப் போலத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். நிதானமும், பொறுமையுமே உங்களை ஒரு கோடியைச் சேர்க்க வைக்கும்.
57
ரகசியம் 4: மாயாஜால '16:13:16' ஃபார்முலா
பலரும் சொல்லத் தவறிய எளிய கணக்கு இதுதான். மாதம் ரூ. 16,000 தொகையை, சராசரியாக 13% வட்டி தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் 16 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். கூட்டு வட்டியின் மகிமையால் உங்கள் முதலீடு 16 ஆண்டுகளில் ரூ. 1 கோடியாக மாறும்.
67
ரகசியம் 5: 'ஸ்டெப்-அப்' (Step-up) எனும் ரகசிய ஆயுதம்
16 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் என்று தோன்றுகிறதா? அப்படியானால் உங்கள் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் 13% அதிகரியுங்கள். அதாவது இந்த ஆண்டு மாதம் ரூ.16,000 என்றால், அடுத்த ஆண்டு உங்கள் சம்பள உயர்விற்கு ஏற்ப ரூ.18,080 ஆக உயர்த்துவது. இப்படிச் செய்தால் வெறும் 13 ஆண்டுகளிலேயே நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும்.
77
பணக்காரர் ஆவது என்பது நிதி ஒழுக்கம்
பணக்காரர் ஆவது என்பது மந்திரம் அல்ல, அது உங்கள் கையில் இருக்கும் நிதி ஒழுக்கம். இன்று நீங்கள் எடுக்கும் இந்தச் சிறு முயற்சி, 16 ஆண்டுகள் கழித்து உங்கள் வாழ்வையே மாற்றியிருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.