
ஒவ்வொருவரும் தங்கள் பணத்தை சாமர்த்தியமாக முதலீடு செய்து பணக்காரர்களாக ஆவதற்கு பின்பற்ற வேண்டிய பொன் விதிகள் சில உள்ளன. நிதி மேலாண்மை வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் அந்த விதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைக் கணக்கிட '72 இன் விதி' (Rule of 72) பயன்படும். முதலீடுகளை இரட்டிப்பாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அறிய, 72 ஐ வட்டிவிகிதத்தால் வகுக்க வேண்டும். வட்டி விகிதம் 4% என்றால், 72 / 4 = 18. 4% வட்டி கிடைதாதல் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக 18 ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கலாம்.
வயது அடிப்படையில் சேமிப்பை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்ய இந்த விதி பயன்படும். வயதுக்கு ஏற்ப, முதலீட்டு அபாயத்தைக் குறைக்கலாம். அதிக ரிஸ்க்கான முதலீடுகள் அதிக வருவாயை வழங்கின்றன. பாதுகாப்பான முதலீடுகளில் ஒற்றை இலக்க வட்டிதான் கிடைக்கிறது.
இப்போது 30 வயதாகும் நபர் சேமிப்பில் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளுக்கு 70% வரை ஒதுக்கலாம். 30% நிலையான வருவாய் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். 100 - 30 (வயது) = 70 என கணக்கிடலாம். இதுவே 70 வயதாகும் நபர் ஈக்விட்டி முதலீடுகளில் 30 சதவீதமும் நிலையான வருவாய் தரும் முதலீடுகளில் 60 சதவீதமும் ஒதுக்கலாம். 100 - 70 (வயது) = 30 எனக் கணக்கிடலாம்.
பட்ஜெட்டில் செலவுகளை நிர்வகிக்கவும் முதலீட்டை அதிகரிக்கவும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எளிமையான விதி 50-30-20. ஒரு நபர் தனது வருவாயை மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும் என்று இந்த விதி கூறுகிறது. தேவைகள் 50%, விருப்பங்கள் 30%, சேமிப்பு 20% என்று பிரித்துக்கொள்ள வேண்டும்.
40% EMI விதி மிகவும் எளிமையானது. மாதம் தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணை வருமானத்தில் 40%க்கு மேல் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த விதி கூறுகிறது.
எதிர்காலத்தில் ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்களை மனதில் வைத்து சேமிக்க வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துகிறது. வேலை இழப்பு, மருத்துவச் செலவு போன்றவற்றால் ஏற்படும் நெருக்கடியைச் சமாளிக்க, மாத வருமானத்தை விட குறைந்தது ஆறு மடங்கு பணம் அவசரகால செலவுக்காக எப்போதும் இருக்க வைக்க வேண்டும். மாத வருவாய் ரூ.1 லட்சம் என்றால், அவசரகாலத் தேவைக்காக ரூ.6 லட்சம் வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீட்டுக்கு குறைந்தபட்சம் எவ்வளவு தொகையை ஒதுக்கலாம் என்று மதிப்பிடுவதற்கு இந்த விதி உதவுகிறது. இன்சூரன்ஸ் தொகை ஆண்டு வருமானத்தின் இருபது மடங்காக இருப்பது சிறந்த காப்பீடாக இருக்கும் இருக்கும். அதாவது, ஆண்டு ஊதியம் ₹12 லட்சமாக இருந்தால், குறைந்தபட்சம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும்.
சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே, வங்கியைக் கலந்தாலோசித்து, சேமிப்புக் கணக்கில் “ஆட்டோ-ஸ்வீப்” வசதியை செயல்படுத்துவது நல்லது.
சேமிப்புக் கணக்கின் மூலம் அதிகப் லாபம் ஈட்டுவதற்கு ஆட்டோ ஸ்வீப் அம்சம் உதவும். சேமிப்புக் கணக்கு இருப்பு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்லும்போது, கூடுதல் பணத்தை தானாகவே அதிக வட்டி விகிதங்களை வழங்கும் பிக்சட் டெபாசிட் கணக்கிற்கு மாற்றப்படும். இதனால், பிக்சட் டெபாசிட் கணக்கில் கிடைக்கும் வட்டியுடன் சேமிப்புக் கணக்கின் வழக்கமான வட்டியும் சேரும். இதனால், வருவாய் 5-7% ஆக அதிகரிக்கிறது.
25X விதி என்பது ஓய்வூதிய சேமிப்பு பற்றி முடிவு செய்ய உதவும் விதியாகும். இந்த விதியின்படி, ரிடையர் ஆவதற்கு முன் வருடாந்திர செலவுகளை விட 25 மடங்கு அதிகமான தொகையை சேமிக்க வேண்டும்.
ஆண்டுச் செலவுகளை விட 25 மடங்கு அதிகமான பணம் இருக்கும்போது, பணியில் இருந்து ஓய்வு பெறுவதைப் பற்றி யோசிக்க முடியும் என்று இந்த விதி கூறுகிறது. உங்கள் ஆண்டு செலவு ரூ.12 லட்சம் என்றால், ரூ.6 கோடி உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்.