Crorepati Plan : மாசம் ₹5000 போதும்...நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா?

Published : Jul 02, 2026, 01:29 PM IST

Crorepati Plan : கோடீஸ்வரர் ஆகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா, அதுக்கு எங்க முதலீடு செய்யணும்னுதான் பலருக்கும் தெரியாது. மாசம் வெறும் 5000 ரூபாய் முதலீடு செஞ்சே கோடீஸ்வரர் ஆக முடியும். அதுக்கான சிம்பிள் கணக்கைப் பார்க்கலாம் வாங்க.

PREV
17
வெறும் ₹5000 முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
பணம் சம்பாதிச்சு கோடீஸ்வரர் ஆகணும்னு எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். சிலர் இதை சாதிப்பாங்க, ஆனா சிலர் எவ்வளவு சம்பளம் வந்தாலும் கடன்லதான் இருப்பாங்க. வர்ற சம்பளத்தை பேங்க் அக்கவுன்ட்ல சும்மா வெச்சிருந்தா பணம் சேருமே தவிர, வளராது.
27
சேவிங்ஸ் அக்கவுன்ட்ல பணம் வளராது
உதாரணமா, நீங்க 10 வருஷமா ஒரு கம்பெனியில வேலை செய்றீங்க. மாசம் ₹30,000 சம்பளம். எல்லா செலவும் போக மாசம் ₹10,000 சேமிக்கிறீங்க. ஆனா, இந்த பணம் பேங்க்ல சும்மா இருந்தா, அது சேமிப்பு மட்டும்தான், வளர்ச்சி இல்லை. இதே பணத்தை SIP-ல போட்டிருந்தா, இன்னைக்கு பல மடங்கு பெருகியிருக்குமே?
37
கோடீஸ்வரர் ஆவது எப்படி?
இந்த கணக்கைத் தெரிஞ்சுகிட்டா, நீங்க மாசம் ₹5000 முதலீடு செஞ்சே கோடீஸ்வரர் ஆகிடலாம். ஆனா, இதுக்கு நீங்க எந்த முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீங்க, எத்தனை வருஷம் முதலீடு செய்றீங்கங்கிறது ரொம்ப முக்கியம்.
47
சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக எந்த முதலீடு பெஸ்ட்?
மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் மாசம் ₹5,000 முதலீடு செஞ்சு, வருஷத்துக்கு சராசரியா 12% வருமானம் கிடைச்சா, சுமார் 25.5 வருஷத்துல உங்ககிட்ட ₹1 கோடிக்கு மேல இருக்கும். இதுல உங்க மொத்த முதலீடு ₹15.3 லட்சம்தான். மீதி எல்லாமே வட்டி மற்றும் கூட்டு வட்டியோட (Compounding) மேஜிக்!
57
தங்கத்தில் முதலீடு செய்தால் எப்படி?
தங்கமும் ஒரு நல்ல முதலீடுதான். மாசம் ₹5,000 தங்கத்துல முதலீடு செஞ்சா, வருஷத்துக்கு சராசரியா 10% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா, இதுல ₹1 கோடி சேர்க்கிறதுக்கு சுமார் 29 வருஷம் வரைக்கும் ஆகலாம்.
67
அப்படியானால் PPF-ல் எவ்வளவு காலம் ஆகும்?

பொது வருங்கால வைப்பு நிதினு (PPF) சொல்லப்படுற திட்டத்துல, வருஷத்துக்கு ₹60,000 (மாசம் ₹5,000) முதலீடு செஞ்சா, தற்போதைய வட்டி விகிதமான 7.1% தொடர்ந்தா, நீங்க ₹1 கோடி சேர்க்கிறதுக்கு 37 வருஷம் ஆகலாம்.

Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!

77
SIP, தங்கம், PPF: முதலீடு செய்ய எது பெஸ்ட்?
  • SIP: அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கு, ஆனா சந்தை அபாயங்களும் உண்டு. 
  • தங்கம்: பணவீக்கத்துக்கு எதிரா ஒரு பாதுகாப்பு. ஆனா, வளர்ச்சி மெதுவா இருக்கும். சில சமயம் விலை ஏறும், சில சமயம் திடீர்னு சரியும். சமீபத்துல கூட தங்க விலை ₹50,000-க்கு மேல குறைஞ்சதை நீங்க கவனிச்சிருக்கலாம். 
  • PPF: அரசாங்க ஆதரவு இருக்கிறதால பாதுகாப்பான திட்டம், ஆனா வருமானம் குறைவு.

எச்சரிக்கை : இந்தக் கணக்குகள் எல்லாமே ஒரு தோராயமான வருடாந்திர வருமானத்தின் அடிப்படையிலானது. உண்மையான வருமானம் சந்தை நிலவரம் மற்றும் வட்டி விகித மாற்றங்களைப் பொறுத்து மாறுபடலாம். முதலீடு செய்றதுக்கு முன்னாடி, உங்க நிதி இலக்குகளைப் பொறுத்து ஒரு நல்ல முடிவை எடுங்க.

EPFO : PF பணம் எடுப்பவரா நீங்க? புதியவிதியைத் தெரியாமல் அப்ளை பண்ணாதீங்க!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories