குறைந்த வட்டி விகிதங்களால் FD-யின் லாபம் குறைந்துள்ள நிலையில், மியூச்சுவல் ஃபண்டுகள், தபால் அலுவலக திட்டங்கள், PPF, தங்கம், மற்றும் பங்குச் சந்தை போன்ற 5 சிறந்த முதலீட்டு வழிகள் அதிக வருமானம் ஈட்ட உதவுகின்றன.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள FD (ஃபிக்ஸ்ட் டெபாசிட்) செய்கிறார்கள். ஆனால் தற்போது வட்டி விகிதம் குறைந்திருப்பதும், பணவீக்கம் அதிகரித்திருப்பதும் காரணமாக, பலர் FD-க்கு பதிலாக அதிக லாபம் தரும் புதிய முதலீட்டு வழிகள் தேட ஆரம்பித்துள்ளனர். இப்போது பார்ப்போம் FD-ஐ விட சிறந்த 5 முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
27
மியூச்சுவல் ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்டுகள் தற்போது மிகவும் பிரபலமான முதலீட்டு வகையாகும். இதில் ஈக்விட்டி, டெப்ட், ஹைப்ரிட் போன்ற பல வகைகள் உள்ளன. SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) மூலம் மாதந்தோறும் சிறு தொகையை முதலீடு செய்து, நீண்ட பெரிய காலத்தில் சொத்து உருவாக்கலாம். சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுத்தால், இது FD-ஐ விட 2–3 மடங்கு வருமானம் தரக்கூடியது.
37
தபால் அலுவலக திட்டங்கள்
இது அரசு உத்தரவாதம் பெற்ற பாதுகாப்பான முதலீட்டு விருப்பம். NSC, KVP, SCSS, மாதாந்திர வருமானத் திட்டம் போன்றவை இதில் அடங்கும். வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதால், பணம் பாதுகாப்பாக இருக்கும். குறைந்த ஆபத்து விரும்புவோருக்கு இது FD-க்கு இணையான நல்ல தேர்வு.
இது 15 ஆண்டுகள் கழித்து, வரி விலக்கு கிடைக்கும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம். அரசாங்கம் வட்டியை உறுதி செய்கிறது. நீண்ட கால சேமிப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
57
தங்கம் மற்றும் கோல்டு ETF
இந்தியர்கள் தங்கத்தை விரும்புவார்கள். ஆனால் இப்போது கோல்டு ETF மற்றும் தங்க பத்திரம் (SGB) மூலம் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதில் தங்கம் நேரடியாக வாங்க தேவையில்லை. விலை உயர்வில் லாபம் கிடைக்கும். பாதுகாப்பும், வட்டியும் இரண்டும் கிடைக்கும்.
67
பங்குச் சந்தை
சிறிதளவு ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்களுக்கு பங்குச் சந்தை நல்ல வழி. நீண்ட காலம் பார்த்து சரியான நிறுவனங்களில் முதலீடு செய்தால், FD-ஐ விட பல மடங்கு வருமானம் கிடைக்கும். ஆனால் நிபுணரின் ஆலோசனையுடன் தான் முதலீடு செய்ய வேண்டும்.
77
பாதுகாப்பான முதலீடு
FD பாதுகாப்பானது, ஆனால் வருமானம் குறைவு. சிறிதளவு ரிஸ்க் எடுத்து மியூச்சுவல் ஃபண்ட், தபால் திட்டம், PPF, தங்கம், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் அதிக வருமானமும் நிதி வளர்ச்சியும் பெறலாம். எந்தவொரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.