தேர்தல் வரப்போகுது.! வீட்டில் இருந்தே 10 நிமிடத்தில் Voter ID ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்.!

Published : Mar 04, 2026, 02:11 PM IST

How to apply for Voter ID online Tamil Nadu : தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. வீட்டிலிருந்தே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
Apply Voter Id Online Tamilnadu

இந்தியாவில் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடிமக்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ புகைப்பட அடையாள ஆவணம் தான் ‘வாக்காளர் அடையாள அட்டை’. வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு மட்டுமல்லாமல் பிற சான்றுகளுக்கும் பயன்படுகின்றன. இந்த அடையாள அட்டையை ஆன்லைன், ஆஃப் லைன் என இரு முறைகளிலும் விண்ணப்பிக்க முடியும்.

25
தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிப்பதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து JPG அல்லது PDF முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • புகைப்படம்: பாஸ்போர்ட் அளவுள்ள சமீபத்திய கலர் புகைப்படம்.
  • வயது சான்று: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/பிறப்புச் சான்றிதழ்/ஆதார் கார்டு அல்லது பான் கார்டு
  • முகவரி சான்று: ஆதார் கார்டு/ரேஷன் கார்டு/மின்சார கட்டண ரசீது அல்லது வங்கி பாஸ்புக்
35
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step):
  1. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும் அல்லது 'Voter Helpline' மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
  2. முதன்முறை பயன்படுத்துபவர் என்றால் வலது புறம் மூலையில் 'Sign Up' கொடுத்து உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட்டு கணக்கைத் தொடங்கவும். ஏற்கனவே கணக்கு இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி 'Login' ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  3. உள்நுழைந்ததும் முகப்புப் பக்கத்தில் உள்ள 'New Registration for General Electors' (Form 6) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. படிவம் 6-ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வரிசையாகப் பூர்த்தி செய்யவும். உங்கள் மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும். பெயர், தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றைச் சரியாக உள்ளிடவும். உங்கள் தற்போதைய வசிப்பிட முகவரியைத் தெளிவாகப் பதிவிடவும்.
  5. மேலே சொன்ன புகைப்படம், வயது சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை அந்தந்த இடங்களில் அப்லோட் செய்யவும்.
  6. அனைத்து விவரங்களையும் சரிபார்த்துவிட்டு, 'Preview' கொடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும். இறுதியில் 'Submit' பட்டனை அழுத்தவும்.
45
விண்ணப்பித்த பிறகு என்ன நடக்கும்?

விண்ணப்பித்தவுடன் உங்களுக்கு ஒரு Reference ID (குறிப்பு எண்) கிடைக்கும். இதை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை (Status) அதே இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) உங்கள் வீட்டிற்கு வந்து விவரங்களைச் சரிபார்ப்பார்.

அனைத்தும் சரியாக இருந்தால், 15 முதல் 30 நாட்களுக்குள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.

55
டிஜிட்டல் அட்டை

நீங்கள் டிஜிட்டல் முறையில் உங்கள் வாக்காளர் அட்டையை உடனே பெற விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட பிறகு 'e-EPIC Download' வசதியைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் பொழுது ஏதேனும் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அருகிலுள்ள இ சேவை மையங்களை அணுகி வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories