Silent Debt: மாசம் ₹5000 EMI தானேன்னு அலட்சியமா இருக்கீங்களா? உங்களை ₹50 லட்சம் கடனில் தள்ளிவிடும்!

Published : Mar 17, 2026, 02:43 PM IST

மாசம் வெறும் 4-5 ஆயிரம் ரூபாய் EMI கட்டுறதால ஒன்னும் ஆகாதுன்னு நினைக்கிறீங்களா? அப்போ ஜாக்கிரதையா இருங்க. இப்போதைய இளைஞர்களை குறிவைக்கும் ஒரு புதிய ஆபத்து தான் 'Silent Debt'. இது என்ன, எப்படி உங்களை கடனாளியாக்குகிறது எனப் பார்ப்போம்.

PREV
15
சைலன்ட் டெட் எப்படி ஆரம்பிக்கிறது?

ஒரு புது ஸ்மார்ட்போன், நண்பர்களுடன் திடீர் ட்ரிப், சோஷியல் மீடியாவில் பார்த்த ஒரு கேட்ஜெட் என சின்ன சின்ன ஆசைகளில் இருந்துதான் இது தொடங்குகிறது. இப்போதெல்லாம் 'Buy Now Pay Later' (BNPL) மற்றும் சுலப EMI வசதிகள் இதை இன்னும் ஆபத்தானதாக மாற்றிவிட்டன. நிதி நிபுணர்கள், 'சைலன்ட் டெட் என்பது ஆரம்பத்தில் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், மெதுவாகக் குவியும் ஒரு கடன்' என்கிறார்கள். சின்ன சின்ன பர்சனல் லோன், கிரெடிட் கார்டு EMI எல்லாம் வெவ்வேறு தளங்களில் சிதறிக் கிடப்பதால், மொத்தமாக நாம் எவ்வளவு பெரிய கடனில் இருக்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை.

25
வருமானம் எட்டு அணா, செலவு ஒரு ரூபாய்!

இன்றைய இளைஞர்களிடம் (Gen Z) இருக்கும் மிகப்பெரிய சிக்கல் இதுதான். அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 7 முதல் 11% வரைதான் உயர்கிறது. ஆனால், அவர்கள் வாங்கும் கிரெடிட் கார்டு, டிஜிட்டல் லோன் போன்ற பாதுகாப்பற்ற கடன்களுக்கான வட்டி 36 முதல் 48% வரை இருக்கிறது. இதனால், அவர்களின் பணம் எப்படி காலியாகிறது என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை.

35
கடன் அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்ன?
  1. பகட்டு வாழ்க்கை (FOMO): சோஷியல் மீடியாவில் மற்றவர்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து, நம் தகுதிக்கு மீறி செலவு செய்வது.
  2. லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்: சம்பளம் உயர்ந்ததும் சேமிக்காமல், வாழ்க்கை முறையை இன்னும் காஸ்ட்லியாக மாற்றுவது.
  3. கடனை அடைக்க இன்னொரு கடன்: பழைய EMI-ஐ கட்ட, ஒரு புதிய கடன் வாங்குவது. இது முடிவே இல்லாத ஒரு கடன் சுழற்சியில் தள்ளிவிடும்.
45
இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால் உஷாராகிடுங்கள்!
  1. உங்கள் சம்பளத்தில் பாதிக்கு மேல் EMI கட்டுவதற்கே போகிறது.
  2. ஒரு EMI-ஐ கட்ட, நீங்கள் இன்னொரு கடன் வாங்க வேண்டியுள்ளது.
  3. உங்கள் EMI பவுன்ஸ் ஆகத் தொடங்கியுள்ளது.
  4. மாத இறுதியில் கையில் சுத்தமாகப் பணம் இல்லை (Paycheque to Paycheque).
  5. அவசரத் தேவைக்கு உங்களிடம் எந்த சேமிப்பும் இல்லை.
55
இதில் இருந்து தப்பிப்பது எப்படி?
  • முதலில் ஒரு டைரியை எடுத்து, உங்களுக்கு மொத்தமாக எவ்வளவு கடன் இருக்கிறது என்று கணக்கு போடுங்கள்.
  • எந்தக் கடனுக்கு வட்டி அதிகமோ (உதாரணமாக, கிரெடிட் கார்டு), அதை முதலில் அடைக்க முயற்சி செய்யுங்கள்.
  • நிறைய சின்ன சின்ன கடன்கள் இருந்தால், அவற்றை ஒரே 'பர்சனல் லோனாக' மாற்றுங்கள். அப்போது ஒரே இடத்தில், குறைந்த வட்டியில் EMI கட்டலாம்.
  • உங்கள் சம்பளத்தில் 35-40% மேல் EMI-க்கு செலவு செய்யாதீர்கள்.
  • தேவைகள் எது, ஆசைகள் எது என்று பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். பகட்டுக்காக செலவு செய்வதை நிறுத்துங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories