IPS சம்பள அமைப்பு
இந்திய சீருடை பணியாளர்களுக்கு குறிப்பாக காவல் பணிக்கு 7வது ஊதியக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சம்பள அமைப்பு பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட சம்பள நிலைகளை (Consolidated Pay Levels) கொண்டுள்ளது. ஒரு IPS அதிகாரியின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளத்தை (Basic Pay) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அவர்களது பயணப்படி (Travel Allowance - TA), அகவிலைப்படி (Dearness Allowance - DA), வீட்டு வாடகைப்படி (House Rent Allowance - HRA) போன்றவைகளை சேர்த்து மொத்த சம்பளம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
துணை கண்காணிப்பளார் டிஎஸ்பி முதல் காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி வரை பல்வேறு பதவிகளை அலங்கரிப்பவர்கள் ஐபிஎஸ் படித்தவர்கள் மட்டுமே. ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று முதலில் பதவிக்கு வரும்போது அனைத்து IPS அதிகாரிகளுக்கும் சம்பளம் ஒரே மாதிரியாக இருக்கும். பின்னர், பணிக்கால அனுபவம் அதைத்தொடர்ந்து வரும் புரோமோஷன் பதவி உயர்வு ஆகியவை சம்பள நிலையை உயர்த்தும்.