
சந்தோஷ தருணங்களில் பரிசளிப்பதும், அதனை பெறுவதும் அளவிடமுடியாத மகிழ்ச்சியை தரும் என்றால் அது மிகையல்ல. அதிலும் தங்க நகை என்றால் கொடுப்பவருக்கும் அதனை பெறுபவருக்கும் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்றால் அது மிகையல்ல. இந்தியாவில் தங்கம் வாங்குவது ஒரு செண்டிமென்ட் விஷயமாகும். திருமணம், திருவிழா, வருடபிறப்பு என பல்வேறு நல்ல நாட்களில் தங்கம் விற்பனை உச்சத்தை தொடும். அதேபோல் திருமணம், குழந்தை பிறப்பு என அனைத்து விதமான விழாக்களிலும், தங்க நகைகள் வழங்கும் பழக்கம் உள்ளது.
தங்கம் மற்றும் தங்க நகைகள் மிகவும் நம்பகமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. பாதுகாப்பு கருதி, தங்க நகைகள் பொதுவாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும். அதோடு ஒரு குறிப்பிட்ட அளவு நகைகள் வீட்டிலும் இருக்கும். இந்நிலையில், வருமான வரி விதிகளின்படி, தங்க நகைகள் வீட்டில் வைத்திருப்பதற்கான வரம்பு குறித்து அறிந்து கொள்ளலாம். வீட்டில் வரம்புக்கு உட்பட்டு தங்க நகைகள் வைத்திருப்பதால் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் வரம்பு மீறும் போது அவர்கள் மீது சட்டம் பாயும்.
திருமணமாகும் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் சக்திக்கு தகுந்தாற்போல் தங்க நகைகளை அணிவிக்கின்றனர். புகுந்தவீடு செல்லும் பெண்ணுக்கு தாய் வீட்டில் எத்தனை சவரன் போடுகின்றனர் என்பது குறித்த பேச்சு வார்த்தை பெண்பார்க்கும் படலத்தின் போதே ஆரம்பம் ஆகும். புகுந்தவீடு, பிறந்த வீடு என பெண்களுக்கு சவரன் கணக்கில் நகை கிடைக்கும் நிலையில் அவர்கள் இத்தனை சவரன் தான் தங்களிடம் வைத்திருக்கலாம் என்று வீதிகள் உள்ளது. அதன்படி திருமணமான பெண்கள் வீட்டில் 500 கிராம் வரை தங்கம் மற்றும் தங்க நகைகளை வைத்திருக்கலாம்.
திருமணம் ஆகாத பெண்கள், 250 கிராம் வரை தங்கம் மற்றும் தங்க நகைகளை வைத்திருக்கலாம். ஆனால் ஆண்களை பொறுத்தவரை, அவர்கள் வீட்டில் 100 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இந்த வரம்பு ஒரு நபருக்கானது. வீட்டில் இரண்டு திருமணமான பெண்கள் இருந்தால் ஒரு கிலோ தங்கம் வைத்துக் கொள்ளலாம். அதேபோன்று வீட்டில் ஒரு திருமணமான பெண் ஒரு திருமணமான ஆண் இருந்தால் 750 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம் என்றும் விதிகள் உள்ளது.
வருமான வரி விதிகளின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக தங்கம் வைத்திருந்தால், அதற்கான ஆதாரத்தை வருமான வரி அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் தங்க நகைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சரியாக இருந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் இருக்கும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மீறிய அளவில் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள் மற்றும் அதற்கு செலுத்திய வரி தொடர்பான ஆவணங்கள் இல்லை என்றால் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். வருமான வரித் துறையின் ரெய்டு அல்லது விசாரணைக்கு உட்படினால், உங்கள் தங்கத்தின் மூலத்தை விலைப்பட்டியல், பரம்பரை ஆவணங்கள், அல்லது சட்டபூர்வமான அறிவிப்புகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
ரூ.2 லட்சம் மேல் விலையுள்ள தங்கத்தை பணமாக வாங்கினால் PAN கார்ட் கட்டாயம். ரூ.10,000 மேல் பரிவர்த்தனைகள் வங்கிக்கணக்கில் மூலமாகவே செய்ய வேண்டும். விலைப்பட்டியல் மற்றும் உங்கள் பெயருடன் பில் கேட்டுக்கொள்ள வேண்டும்.
வங்கி லாக்கர்கள், வருடச்சார்பு கட்டணத்துடன். ரெய்டு செய்ய நீதிமன்ற அனுமதி தேவை.
PhonePe, Paytm போன்றவை.
சட்டபூர்வமாகவும் கண்காணிக்க வசதியாகவும் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வழங்குகிறது.
வட்டி கிடைக்கும், மெச்சூரிட்டி வரை வைத்திருந்தால் capital gains exemption.
சட்டபூர்வமாகவும் வரிவிலக்காகவும் இருக்கும்.