UPI கிரெடிட் கார்டு என்றால் என்ன? பிம்ஸ்டெக் நாடுகளில் மோடி வைத்த கோரிக்கை!

UPI கிரெடிட் கார்டு UPI செயலியுடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. பிம்ஸ்டெக் நாடுகளுடன் UPI இணைக்கப்படுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.

UPI credit card

UPI கிரெடிட் கார்டு, UPI செயலியுடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது. அதாவது, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த விரும்பினால், உங்களிடம் ஒரு கார்டை இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. கார்டை UPI செயலியுடன் இணைத்து பணம் செலுத்தலாம்.

UPI credit card

உலகளாவிய ரியல் டைம் பரிவர்த்தனைகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்படும் சூழலில், டிஜிட்டல் பேமெண்ட் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக UPI பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், UPI பயன்பாட்டை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்துவருகிறது.


UPI credit card

ஏப்ரல் 4ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகம், தொழில் மற்றும் சுற்றுலாவை வலுப்படுத்தும் முயற்சியாக, பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளுடன் இந்தியாவின் UPI முறையை இணைக்க கேட்டுக்கொண்டார்.

UPI credit card

பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளில் இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும். இந்தியாவின் கோரிக்கை செயல்படுத்தப்படும்போது, இந்த நாடுகள் அனைத்திலும் UPI பரிவர்த்தனை மூலம் விரைவாக பணம் செலுத்தவும் பெறவும் முடியும்.

UPI credit card

UPI கிரெடிட் கார்டை பயன்படுத்துவதால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் கிரெடிட் கார்டின் விவரங்களை டைப் செய்யவேண்டிய அவசியம் இல்லை. கிரெடிட் கார்டு வரம்பிற்குள் எதையும் வாங்கலாம். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கேஷ்பேக் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறலாம். இந்த நன்மைகள் வங்கிக்கு வங்கி வேறுபடும். UPI கிரெடிட் கார்டு உடனடியாப பணம் செலுத்த அனுமதிக்கிறது. இதனால், ​​UPI பரிவர்த்தனைகள் பரவலாக ஏற்கப்படுகின்றன.

Latest Videos

click me!