Gold Rate Today: மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

First Published May 10, 2023, 10:15 AM IST

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி இறங்கி வரும் நிலையில், நேற்றைய விலையில் இருந்து இன்று சற்று அதிகரித்து. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5,742 ஆகவும், 8 கிராம் 45,936 ருபாய்க்கு விற்கப்படுகிறது.


தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. மேலும் இந்திய பெண்கள் அதிகளவில் தங்கத்தின் மீதான ஆர்வமும் தங்கம் உள்ளிட்ட ஆபர பொருட்களின் விலையை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில்  நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். 
 

Gold

கடந்த வாரம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ.45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை இந்த வாரம் ரூ.46 ஆயிரம் வரை தாண்டியது.பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வரும் நாட்களில் சவரன் 50 ஆயிரத்தை தாண்டும் என்ற அச்சமும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக தங்க நகைகளை அதிகளவு சேர்க்கும் நிலையும் தற்போது காணப்படுகிறது. நேற்றைய  நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54  உயர்ந்து ரூ.45,736ஆக விற்பனை செய்யப்பட்டது. . 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.5.717ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,186ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,488ஆக விற்பனையானது. 

gold

இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை பொருத்தவரை(10.5.2023) 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5,742 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது. 8 கிராம் 45,936 ருபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்துள்ளது.  மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 6,264 ரூபாயும், 8 கிராம் தங்கத்தின் விலை 50,112 ரூபாயக உள்ளது. வெள்ளி ஒரு கிராம் நேற்றைய விலையான ரூ.82.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 82,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!