அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கூட்டாக இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த அளவு இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்கத்தைவிட குறைவுதான். இந்தியாவில் சேமிப்பு மற்றும் முதலீட்டு உத்திகளில் தங்கம் முக்கிய பங்கு வகிப்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.