சாட்ஜிபிடி கிப்லி படங்களை உருவாக்குவது காப்புரிமை மீறலா?

ChatGPT மூலம் கிப்லி பாணியில் படங்கள் உருவாக்குவது சட்டப்பூர்வமானதா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஹயாவோ மியாசாகி AI படங்களை எதிர்த்துள்ளார், அதே நேரத்தில் OpenAI பதிப்புரிமை சிக்கல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
 

ChatGPT Ghibli Art copyright violation

ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு, AI மூலம் உருவாக்கும் படங்களின் சட்டரீதியான பயன்பாடு குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. சாட்ஜிபிடியின் புதிய அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிரபலமான மீம்ஸ்களை கிப்லி பாணியில் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர்.

ChatGPT Ghibli Art copyright violation

சாட்ஜிபிடி (​ChatGPT) இல் அறிமுகமாகியுள்ள சமீபத்திய அப்டேட் மூலம் கிப்லி படங்களை உருவாக்கம் வசதி கிடைக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஹயாவோ மியாசாகியின் புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோவான ஸ்டுடியோ கிப்லியின் தனித்துவமான பாணியில் காட்சிகளை உருவாக்க முடியும்.


ChatGPT Ghibli Art copyright violation

ஸ்டுடியோ கிப்லியின் இணை நிறுவனர், ஹயாவோ மியாசாகி, சாட்ஜிபிடியில் AI-உருவாக்கிய படங்களை பற்றி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது "அவமானகரமானது" என்று அவர் சாடினார். ஒப்புதல் இல்லாமல் தனித்துவமான கலை பாணிகளை நகலெடுப்பது சகஜமாகிவிடக்கூடும் என்ற கலைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ChatGPT Ghibli Art copyright violation

இந்தக் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வாழும் கலைஞர்களின் பாணிகளையும் சில பதிப்புரிமை பெற்ற அம்சங்களையும் பின்பற்றி படங்களை உருவாக்குவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை OpenAI செயல்படுத்தியுள்ளது. அறிவுசார் சொத்துரிமைகளுக்கு மரியாதை கொடுத்து, படைப்பில் பரிசோதனைகளை அனுமதிப்பதே தங்கள் நோக்கம் என்று ஓபன் ஏஐ கூறுகிறது.

ChatGPT Ghibli Art copyright violation

AI தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், அது தற்போதுள்ள சட்ட கட்டமைப்புகள் மற்றும் நெறிமுறைகளுக்கு சவால் விடுகிறது. இது கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய விவாதங்களைத் தூண்டுகிறது.

ChatGPT Ghibli Art copyright violation

பதிப்புரிமைச் சட்டங்கள் குறிப்பிட்ட படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்களைப் பாதுகாக்கும். ஆனால், அவை பொதுவாக ஒரு கலைஞரின் ஒட்டுமொத்த ஓவிய பாணிக்கு காப்புரிமை பாதுகாப்பைக் கொடுப்பதில்லை. இருப்பினும், AI-உருவாக்கிய படங்கள் ஸ்டுடியோ கிப்லியின் படைப்புகளின் தனித்துவமான கூறுகளைப் பிரதிபலிப்பதால் பதிப்புரிமை மீறல் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Latest Videos

click me!