97% வரை லாபம்.. அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்கள் லிஸ்ட்
பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? அல்லது எதில் லாபம் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? அல்லது எதில் லாபம் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம், ஆபத்து குறைவு என்பதாகும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, பலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள்.
லார்ஜ் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு அதிகம் உள்ளது. கடந்த 1 வருடத்தில், 5 சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல வருமானத்தை அளித்துள்ளன.
சுமார் 97% வரை வருமானம் அளித்துள்ள ஃபண்டுகள் என்னென்ன ? என்பதை பார்க்கலாம். முதலில் மிரா அஸ்ஸெட் ஃபண்ட் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 47% வருமானம் அளித்துள்ளது.
தற்போது இந்த ஃபண்டில் சுமார் 1,869 கோடி ரூபாய் உள்ளது. 2021 முதல் இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் அளித்து வருகிறது.
அடுத்த இடத்தில் மிரா அஸ்ஸெட் ஹாங் செங் ஃபண்ட் உள்ளது. இது ஒரு சர்வதேச ஃபண்ட். 2021 முதல் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்து வருகின்றனர். ஒரு வருடத்தில் 97% வருமானம்.
கடந்த ஒரு வருடத்தில் மிரா அஸ்ஸெட் ஹாங் செங் ETF ஃபண்ட் 64% வருமானம் அளித்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் பயனடைந்துள்ளனர். நிப்பான் இந்தியா கடந்த ஒரு வருடத்தில் இதன் வருமானம் 51% கொடுத்துள்ளது.
இறுதியாக டிஎஸ்பி வேர்ல்ட் கோல்ட் இடிஎஃப் பற்றி பார்க்கலாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இதைவிடச் சிறந்தது எதுவும் இருக்க முடியாது. ஒரு வருடத்தில் வருமானம் 54%.
இந்த ஐந்து ஃபண்டுகளிலிருந்தும் அதிக வருமானம் கிடைத்துள்ளது. சந்தையில் முதலீடு என்பது நிதி அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி