எந்தவொரு கடன் ஒப்புதலைப் பெறுவதற்கும் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது சிபில் (CIBIL) ஸ்கோர். இது உங்கள் கடந்த கால கடன் பரிவர்த்தனைகளைச் சுருக்கமாகக் கூறும் மூன்று இலக்க எண். கடன் அறிக்கையைப் பராமரிப்பது, சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவை நல்ல CIBIL ஸ்கோரைப் பராமரிக்க உதவும்.
கடன் வழங்கும்போது கிரெடிட் கார்டு பயன்பாடு எப்போதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இருப்பினும், கிரெடிட் கார்டு இல்லாமலேயே நீங்கள் இன்னும் நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியும்.