Home Loan Update: வீட்டு கடன் வேண்டுமா? இனி இதெல்லாம் அவசியம்!

Published : Jul 12, 2025, 12:54 PM IST

வீட்டுக் கடன் பெற, வருமானம், வயது, கிரெடிட் ஸ்கோர் போன்ற தகுதிகள் முக்கியம். முன்பணம் செலுத்தத் தயாராக இருப்பதும், இணை விண்ணப்பதாரர் இருப்பதும் கடன் கிடைக்க உதவும். ஏற்கனவே உள்ள கடன்களை அடைப்பதும் நன்மை பயக்கும்.

PREV
15
வீட்டுக்கடன் எளிதாக கிடைக்க இதனை செய்ய வேண்டும்

வீட்டுக் கடன் என்பது பலரது கனவுகளை நனவாக்கும் நிதி உதவி. ஆனால், இது எல்லோருக்கும் உடனடியாக கிடைப்பதில்லை. ஏனெனில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் முன் பல முக்கியமான தகுதிகளை பரிசீலிக்கின்றன. உங்கள் வருமானம், வயது, பண பழக்கம் போன்றவை அதற்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன.

25
வருமானம் முக்கிய தகுதி

வீட்டுக் கடன் பெற, நீங்கள் மாதம் குறைந்தபட்சம் ₹25,000 முதல் ₹30,000 வரையில் சம்பாதிக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் வருமான வரலாற்றும், எதிர்காலத்திற்கான நிலைத்த வருமானத்தையும் பார்த்துத்தான் வங்கிகள் கடன் தொகையை நிர்ணயிக்கின்றன.

உங்கள் வயது முக்கியம்

வீட்டுக் கடன் பெரும்பாலும் நீண்ட காலம் (20 - 30 ஆண்டுகள்) தவணை செலுத்தும் வகையில் இருக்கும். எனவே, உங்கள் வயது 21 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 30-40 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

35
கிரெடிட் ஸ்கோர் (Credit Score)

உங்கள் கிரெடிட் ஸ்கோர் 700 - 750 இடையே இருந்தால், நீங்கள் நம்பகமான நபராக கருதப்படுவீர்கள். கீழ் ஸ்கோர் இருந்தால், வட்டி அதிகம் விதிக்கப்படும் அல்லது கடன் மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கடனுக்கு முன் உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

முன்பணம் தயார் வைத்திருக்கவும்

வீட்டுக் கடனுக்கு நீங்கள் குறைந்தது 20% தொகையை முன்பணமாக (Down Payment) செலுத்தும் தயாராக இருக்க வேண்டும். இதுவே வங்கியின் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உங்கள் கடன் தொகையும் குறையும்.

45
இணை விண்ணப்பதாரர் இருந்தால் சிறப்பு

உங்கள் வீட்டில் ஒருவர் கூடுதல் வருமானம் பெற்றால், அவரின் பெயரை இணை விண்ணப்பதாரராக சேர்ப்பது கடன் பெற வலுவாக இருக்கும். இது வங்கிக்கு உங்கள் குடும்பத்தின் வருமான வலிமையை காட்டும்.

55
ஏற்கனவே உள்ள கடன்களை அடைக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பிற கடன்கள் இருந்தால், அவற்றை முடித்து வைக்கவும். இது உங்கள் EMI சுமையை குறைக்கும். உங்கள் ஏற்கனவே உள்ள கடன்கள் பற்றிய தகவல்களை வங்கிக்கு தெளிவாக தெரிவிப்பதும் நன்மை தரும்.வங்கிகள் விதிக்கும் ஒவ்வொரு நிபந்தனையையும் ஆராய்ந்து, தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பதன் மூலம் வீட்டு கடன் பெறும் செயல்முறை எளிதாகும். உங்கள் வருமானத்தை நிரூபிக்கும் ஆவணங்கள், அடையாள ஆதாரங்கள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முழுமையாக இருந்தால் வீட்டுக் கடன் உங்கள் கையில் விரைவில் வந்துவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories