வருமான வரி தாக்கல் செய்யும்போது பழைய வரி திட்டத்தில் வீட்டுக் கடனுக்கான வரிவிலக்குகளைப் பயன்படுத்தி அதிகம் சேமிக்கலாம். வட்டி, முதன்மைத் தொகை, கூட்டுக் கடன், முதல் முறை வாங்குபவர் சலுகை, மூலதன வரிவிலக்கு எனப் பல சலுகைகள் உள்ளன.
வருமான வரி தாக்கல் செய்யும் போது, சிலவற்றை கவனத்தில் கொண்டால் ஆயிரக்கணக்கான ரூபாய் சேமிக்க முடியும். வருமான வரி தாக்கல் செய்யும்போது பழைய வரி திட்டத்தில் வீட்டு கடனுக்கான முக்கியமான 5 வரிவிலக்குகளை பயன்படுத்தி அதிகம் சேமிக்கலாம். நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் பெரிய லாபத்தையும் சேமிப்பையும் தரும். அதனை வைத்து புதிய முதலீடுகளை கூட செய்து கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
28
வீட்டுக்கடன்: வரிவிலக்கில் சேமிக்கலாம்!
நீங்கள் வீடு வாங்கியிருந்தால் உங்கள் வீட்டு கடனை அடிப்படையாகக் கொண்டு வரிவிலக்குகளை பயன்படுத்தி வருமான வரி தாக்கலில் பெரிய சேமிப்புகளை பெறமுடியும். குறிப்பாக பழைய வரி திட்டத்தை தேர்வு செய்தவர்கள், கீழ்க்கண்ட முக்கியமான வீட்டு கடன் வரி சலுகைகளை பயன்படுத்தி அதிக வரி விலக்குகளை பெறலாம்.
38
ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு
முதலீடு தவணை (Principal Repayment) – 80C பிரிவின் கீழ்
வீட்டு கடனில் அதன் முதன்மை தொகைக்கு ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். இதில் ஸ்டாம்ப் டியூட்டி, பதிவு கட்டணங்கள் உள்ளிட்டவை சேர்த்துக்கொள்ளலாம். அதனை பெற குறைந்தது 5 ஆண்டுகள் அந்த வீட்டை வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் வீடு வாங்கியோ அல்லது வீட்டை கட்டியோ அதிக செலவு செய்திருக்கும் நடுத்தர குடும்பத்திற்கு இதன் மூலம் கிடைக்கும் தொகை சந்தோஷத்தை கொடுக்கும்.
வாடகைக்கு விடாமல் நாம் குடியிருக்கும் சொந்த வீட்டிற்கு ஆண்டுக்கு ₹2 லட்சம் வரை வீட்டு கடனின் வட்டிக்கு வரிவிலக்கு பெறலாம். இது FY 2024–25-இலும் நிலுவையிலேயே உள்ளது. ஆனால் வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் வட்டிக்கு வரம்பு இல்லை. அதில் ₹2 லட்சம் வரை மட்டுமே மற்ற வருமானங்களில் இழப்பாக சேர்த்துக் கொள்ளலாம். மீதியை 8 ஆண்டுகள் வரை மாற்றி வைத்து பயன்படுத்தலாம். இதன் முலம் ஒரு கணிசமான தொகை சேமிக்க முடியும்.
58
முதல் வீடு : கூடுதல் சலுகை
முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகை
பிரிவு 80EE: FY 2016–17 இல் கடன் பெறுபவர்களுக்கு ₹50,000 கூடுதல் வட்டி விலக்கு கிடைக்கம். அதேபோல் பிரிவு 80EEA: April 2019 – March 2022 இடையே ₹45 லட்சம் மதிப்பிற்குள் வீடு வாங்கியவர்கள் ₹1.5 லட்சம் வரை கூடுதல் வட்டிக்கான வரிவிலக்கு பெறலாம். ஆனால் இதில் இரண்டில் எதையாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒரே வீட்டை இண்டு பேர் சேர்ந்து வாங்கி பயன்படுத்தி வந்தால் கூட வரிவிலக்கு பெறமுடியும். ஒரே வீட்டை இரண்டு பேரும் சேர்ந்து வாங்கி, இருவரும் கடன் வாங்கியிருந்தால், இருவரும் தனித்தனியாக ₹1.5 லட்சம் (80C) மற்றும் ₹2 லட்சம் (24b) வரை வரிவிலக்கு பெறலாம். இதனால், வரிவிலக்கு இரட்டிப்பு அளவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
78
வீடு விற்பனை: வரி விலக்கு பெறலாம்
Section 54 – வீடு விற்பனையில் மூலதன இலாப வரிவிலக்கு
ஒரு வீடு விற்பனையால் வந்த நீண்ட கால இலாபத்தை, புதிய வீடு வாங்கவோ கட்டவோ மீண்டும் முதலீடு செய்தால், Section 54ன் கீழ் முழுமையான வரிவிலக்கு பெற்று பல ஆயிரங்கள் சேமிக்கலாம். அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி, விற்பனைக்கு முன் 1 வருடத்திற்குள் அல்லது 2 வருடங்களில் புதிய வீடு வாங்க வேண்டும். அல்லது 3 ஆண்டுகளுக்குள் புதிய வீட்டை கட்டிக்கொண்டிருக்க வேண்டும். புதிய வீடு வீட்டு கடன் மூலம் வாங்கினாலும் விலக்கு கிடைக்கும் என்பது ஜாக்பாட் செய்திதானே!
88
ஆலோசனை அவசியம்
பழைய வரி திட்டத்தைத் தேர்வு செய்தவர்கள், வட்டி, முதன்மை தொகை, கூட்டுப் கடன், முதல்முறையாக வாங்குபவர் சலுகை, மூலதன வரிவிலக்கு என 3 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெற்று சேமிக்கலாம். புதிய வரி திட்டத்தில் இந்த சலுகைகள் இல்லை என்பதால், வீடு வாங்கியவர்கள் பழைய திட்டமே தேர்வு செய்தால் நன்மை அதிகம். எனினும் சரியான நிதி ஆலோசகரின் ஆலோசனைக்கு பின் இதனை செய்தால் நல்லது.