Discount Sale: தள்ளுபடி விற்பனை..! யாருக்கு லாபம்.! தெரிந்த டார்கெட்.! யாருக்கும் தெரியாத சீக்ரெட்!

Published : Jul 24, 2025, 03:02 PM IST

தள்ளுபடி விற்பனையின் பின்னணியில் உள்ள உத்திகள் மற்றும் நுகர்வோர் கவனிக்க வேண்டியவை ஆகியவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது. நுகர்வோர் எவ்வாறு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்பதையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

PREV
15
வாடிக்கையாளர்களை மயக்கும் தள்ளுபடி

தள்ளுபடி என்ற சொல்லுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. எந்த கடைக்கு சென்றாலும் அங்கு ஏதேனும் ஒரு இடத்திலாவது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்க்காமல் இருக்க முடியாது. அதிலும் எங்கு தள்ளுபடி என்ற வார்த்தை இருக்கிறதோ அங்குதான் கூட்டம் அலைமோதும். அதவும் ஆடிமாதம் என்றால் தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவதே பலரின் பொழுது போக்காக உள்ளது. தற்போது கடைகளை தாண்டி இகாமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடியை அறிவித்து விற்பனையை கல்லா கட்டுகின்றன. தற்போதெல்லாம் பெட்டிக்கடைக்கு சென்றால் கூட தள்ளுபடி இருக்கா என்ற கேள்வியை வாடிக்கையாளர்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.ஆனால் இந்த தள்ளுபடி விற்பனை என்பது உண்மையாகவா? யாருக்கு லாபம்? நாம்தான் லாபப்படுறோமா? இல்லையா? என்பதை பற்றி பார்ப்போம்.

25
தள்ளுபடி தருவது எப்படி?

தள்ளுபடியான விற்பனை ஒரு மாறுபட்ட வணிக தந்திரம் என்று சொல்கின்றனர் சிலர். விலை உயர்த்தி பின்னர் கழிப்பது, பழைய ஸ்டாக் தள்ளுபடி என பல்வேறு உத்திகள் அதன் பின்னணியில் இருப்பாத விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

கட்டுப்படுத்திய விலை உயர்வு

முதலீட்டாளர்கள் முதலில் விலையை உயர்த்தி, அதன் பிறகு அதில் தள்ளுபடி தருகின்றனர் என்றும் யாருமே நஷ்டத்திற்கு விற்பதில்லை எனவும் தள்ளுபடி விற்பனை குறித்த ஆய்வு கூறுகிறது. எடுத்துக்காட்டாக ஆயிரம் ரூபாய் பொருளை ₹1200 என்று கூறி, 20% தள்ளுபடி என விற்பனை செய்வது நடைமுறையில் இருப்பதாக அந்த ஆயவு தெரிவித்துள்ளது.

35
பழைய ஸ்டாக்கு தள்ளுபடி

விற்பனை ஆகாத பழைய பொருட்களை கையகப்படுத்த, 'Clearance Sale' என்ற பெயரில் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படுகிறதாக தெரிகிறது. இதில் பொருட்கள் வாங்குவோருக்கு அதிர்ஷ்ட வசமாக நல்ல பொருட்களும் கைகளில் சிக்கும். ஆனால் பெரும்பாலும் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் பொருட்கள் அப்படியே கடைபறப்பி விற்பனை செய்யப்படுகிறது.

எமோஷனல் மார்க்கெட்டிங்

"தீபாவளி ஸ்பெஷல்", "புதிய வருட தள்ளுபடி", "பில்ட் யோர் ஹோம் பஜாரா" போன்ற சலுகைகள் மூலம் உணர்வுகளைத் தூண்டும் விற்பனையாகும். அதேபோல் ஆடியில் அறிவிக்கப்படும் தள்ளுபடி விற்பனை மக்களை அப்படியே சுண்டி இழுக்கிறது. தேவையோ இல்லையே பலர் பொருட்களை வாங்கி குவிக்கும் நிலை உள்ளது.

45
பண்டல் விற்பனை (Bundle Offer)

இரண்டு பொருள் வாங்கினால் மூன்றாவது இலவசம் என்று தற்போது சந்தையில் பிரபலமான ஆபர் வாடிக்கையாளர்களை கவர்கிறது. உண்மையில் மூன்றாவது பொருளின் விலையை மொத்த விலையுடன் சேர்த்திருப்பார்கள் என்று மார்க்கெட்டிங் வல்லுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலைநிறைவு நேரம் (Flash Sales)

குறுகிய நேரத்தில் கிடைக்கும் சலுகைகளாக அறிவிக்கப்படும் Flash Sales கடையில் உள்ள வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்படும். அப்போது கடையில் இருப்போர் ஆபரில் கிடைக்கும் பொருட்களை சட்டென அள்ளி செல்வர். இது முடிவெடுக்கும் சுதந்திரத்தையே நம் கையில் இருந்து எடுத்துக்கொள்ளும் உத்தி என கூறப்படுகிறது.

55
தள்ளுபடி உண்மையா?

தள்ளுபடி என்றால் பொருளின் மதிப்பு குறைவாகும் என்ற அர்த்தமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வியாபாரி லாபம் இல்லாமல் எந்த நேரத்திலும் பொருளை விற்பனை செய்ய மாட்டார். தள்ளுபடிக்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கங்களை அறிந்துகொண்டால் அவசியம் வங்கி சேமிப்பு மிச்சமாகும்.

தள்ளுபடி வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

  • உண்மையான MRP யைக் கண்டறியவும்.
  • வாடிக்கையாளர் விமர்சனங்களை படிக்கவும்.
  • தேவையற்ற பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டாம்.
  • தள்ளுபடி விலையில் தரம் மற்றும் சர்வீசும் சரிபார்க்கவும்.
Read more Photos on
click me!

Recommended Stories