ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததால், வீட்டுக் கடன் EMI குறைய வாய்ப்புள்ளது. கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தி, வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கிக்கு முறையிடலாம் அல்லது கடனை மாற்றலாம்.
நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை (Repo Rate) தொடர்ச்சியாக இரண்டு முறை குறைத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆகக் குறைத்தது.
இதற்கு முன்பு, பிப்ரவரியிலும் இதே அளவுக்குக் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இந்த குறைப்பு 2025-26 நிதியாண்டின் பிற்பகுதியிலும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26
Home Loan EMI
வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதம் குறையுமா?
இப்போதெல்லாம் பெரும்பாலான வீட்டுக் கடன்கள் மாறுபடும் வட்டி விகிதங்களுடன் வழங்கப்படுகின்றன. இவை ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ரெப்போ விகிதம் திருத்தப்பட்டவுடன், பெரும்பாலான வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை மதிப்பாய்வு செய்கின்றன. ஆனால், குறைந்த கடன் மதிப்பெண் உள்ளவர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை.
நீங்கள் முன்பு குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் EMI-யைக் குறைக்க இப்போது சரியான நேரம். பின்வரும் எளிய வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
36
Credit Score
கிரெடிட் ஸ்கோர்:
கடந்த 2-3 ஆண்டுகளில் நீங்கள் EMI-களை சரியான நேரத்தில் செலுத்தி, எந்த தவணையையும் தவறாமல் செலுத்தியிருந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் இப்போது மேம்பட்டிருக்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், அடுத்த கட்டத்துக்குச் செல்லுங்கள். இல்லையென்றால், முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.
46
Home Loan Interest Rate
வீட்டுக் கடன் கணக்கின் வட்டி விகிதம்:
உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் வீட்டுக்கடன் மீது எவ்வளவு வட்டி வசூலிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750+ ஆக இருந்து, வங்கி ஏற்கனவே மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கிக்கொண்டிருந்தால் நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அப்படி இல்லையென்றால், நிச்சயமாக அடுத்த கட்டத்துக்குச் செல்லுங்கள்.
56
Request the bank to reduce the interest rate
வட்டி விகிதத்தைக் குறைக்க முறையிடவும்:
உங்கள் கடன் மதிப்பெண் தற்போது மேம்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளதாகவும் உங்கள் வங்கிக்கு தெரிவிக்கலாம். இவற்றின் அடிப்படையில் உங்கள் கடன் மீதான வட்டி விகிதத்தையும் திருத்த வேண்டும் என்று மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ வங்கியிடம் வேண்டுகோள் வைக்கலாம்.
வங்கி வட்டியைக் குறைக்க மறுத்தால், கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக அவர்களிடம் சொல்லலாம். பெரும்பாலும் வங்கிகள் தங்கள் பழைய மற்றும் நல்ல வாடிக்கையாளர்களை இழக்க விரும்புவதில்லை, எனவே அவர்கள் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்க வாய்ப்புள்ளது.
66
Transfer home loan
வீட்டுக் கடனை மாற்றுதல்:
உங்கள் வங்கி சிறந்த வட்டி விகிதத்தை வழங்க மறுத்தால், உங்கள் கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம். இதற்காக, நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து, மலிவான விகிதத்தில் கடன்களை வழங்கும் வங்கியைக் கண்டறிய வேண்டும்.