How to Increase Health Insurance Cover : உங்கள் சுகாதாரக் காப்பீடு ₹15 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், கவனமாக இருங்கள். ஒரு புதிய அறிக்கையின்படி, கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைச் செலவு மூன்று ஆண்டுகளில் இருமடங்காகியுள்ளது.
உங்க ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ₹15 லட்சத்துக்கும் குறைவா இருந்தா, ஜாக்கிரதை! ஒரு புதிய அறிக்கைப்படி, கடந்த 3 வருஷத்துல கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சை செலவு ரெண்டு மடங்கு அதிகமாயிருக்கு. ₹5-10 லட்சம் கவரேஜ் உங்க குடும்பத்துக்கு போதாது. உங்க சேமிப்பை எப்படி காப்பாத்தலாம்னு தெரிஞ்சுக்கோங்க.
27
ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான அதிர்ச்சி தகவல்
கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் (Care Health Insurance) சமீபத்தில் ஒரு டேட்டாவை வெளியிட்டது. அதன்படி, கடந்த 3 வருஷத்துல கல்லீரல் நோய்களுக்கான இன்சூரன்ஸ் க்ளைம் ரெண்டு மடங்கு அதிகமாயிருக்கு. இதோட நேரடி அர்த்தம், மக்கள் முன்னைவிட அதிகமா கல்லீரல் பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு போறாங்க. இந்த நோய் இப்போ ஒரு குறிப்பிட்ட வயசுக்கோ, நகரத்துக்கோ மட்டும் வர்றதில்லை என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
37
வருடா வருடம் உயரும் கல்லீரல் தொடர்பான கிளைம்கள்
இந்த ரிப்போர்ட்டின்படி, 30-40 வயசு இளைஞர்கள் மத்தியில் கல்லீரல் க்ளைம் ஒவ்வொரு வருஷமும் 5-10% அதிகமாகுது. இதுவே டயர்-2, டயர்-3 நகரங்கள்ல வருஷத்துக்கு 10-15% வரைக்கும் உயருது. பெண் பாலிசிதாரர்கள் மத்தியிலர கல்லீரல் தொடர்பான க்ளைம்கள் ஒவ்வொரு வருஷமும் 10% அதிகரிக்குது.
இப்போதெல்லாம் குறைஞ்சது ₹15 லட்சத்துக்காவது ஹெல்த் கவர் இருக்கணும்னு இன்சூரன்ஸ் கம்பெனிகள் சொல்றாங்க. இதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஃபேட்டி லிவர் (Fatty Liver), கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis), கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) மாதிரி நோய்கள் ஆரம்பத்துல தெரிய வராது. ஆனா, கண்டுபிடிக்கிறப்போ சிகிச்சை ரொம்ப சிக்கலாவும், செலவு அதிகமாவும் ஆகிடும். கல்லீரல் நோய்க்கு அடிக்கடி டெஸ்ட், விலை உயர்ந்த மருந்துகள், நீண்ட நாள் ஹாஸ்பிடல் அட்மிஷன்னு செலவு கூடிக்கிட்டே போகும். நிலைமை மோசமாகி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டா, பில் ₹50 லட்சத்துல இருந்து ₹70 லட்சம் வரைக்கும் போகலாம்.
57
பாலிசி வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியது
உங்க பாலிசி ரொம்ப பழையதா இருந்தா, அதை மாத்த வேண்டிய நேரம் இது. ₹10 லட்சத்துக்கும் குறைவான பாலிசி, இப்போ வர்ற நோய்களுக்கு பத்தாம போயிடுது. ஒரே பாலிசியில மொத்த குடும்பத்துக்கும் இன்சூரன்ஸ் எடுத்திருந்தா, ஒருத்தரோட சிகிச்சையிலேயே மொத்த பணமும் தீர்ந்துடலாம். மருத்துவமனை செலவுகள் ஒவ்வொரு வருஷமும் அதிகமாகுது. அதனால, இன்சூரன்ஸ் எடுக்கும்போது பணவீக்கத்தை கண்டுக்காம விடுறது பெரிய ரிஸ்க்.
67
உடனே செய்ய வேண்டியது என்ன?
பாலிசியை 'டாப்-அப்' பண்ணுங்க: உங்க பேஸ் பாலிசி கம்மியா இருந்தா, குறைஞ்ச பிரீமியத்துல 'டாப்-அப்' எடுத்து உங்க கவரேஜை ₹15-20 லட்சம் வரைக்கும் அதிகப்படுத்துங்க.
கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் (Critical Illness Rider) வாங்குங்க: இந்த ரைடர், ஒரு தீவிர நோய்னு தெரிஞ்சதும் உங்களுக்கு மொத்தமா ஒரு தொகையை கொடுக்கும். இது சிகிச்சையை சுலபமாக்கும்.
ரெகுலர் செக்கப்: உங்க வருடாந்திர செக்கப்ல கல்லீரல் செயல்பாட்டு சோதனையை (LFT) சேர்த்துக்கோங்க. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கிறதுதான் பெரிய சேமிப்பு மற்றும் புத்திசாலித்தனம்.
வாழ்க்கை முறையை மாத்துங்க: தப்பான உணவுப் பழக்கம், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை கல்லீரலுக்கு எதிரி. உடல் எடையை கட்டுப்பாட்டில் வெச்சு, ஜங்க் ஃபுட்டை தவிர்த்திடுங்க.
77
பொறுப்புத் துறப்பு
இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை அல்லது தொழில்முறை காப்பீட்டு ஆலோசனைக்கு மாற்றானது அல்ல. கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சை அல்லது மருத்துவத்திற்கு எப்போதும் தகுதியான மருத்துவரை அணுகவும்.
மேலும், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு முன், பாலிசியின் விதிகள், நிபந்தனைகள் மற்றும் விலக்குகளை (Exclusions) கவனமாகப் படித்து, உங்கள் காப்பீட்டு ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும். புள்ளிவிவரங்கள், அறிக்கைகள் மற்றும் சந்தை ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை, அவை அவ்வப்போது மாறக்கூடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.