கிராஜுவிட்டி கணக்கிடுவது எப்படி? 5, 7, 10 ஆண்டு சர்வீஸுக்கு பணிக்கொடை எவ்வளவு?

First Published | Jan 13, 2025, 7:42 PM IST

Gratuity Calculator 2025: கிராஜுவிட்டி அல்லது பணிக்கொடை என்றால் என்ன? அதற்கான விதிகள், கணக்கிடும் முறை மற்றும் அது ஊழியர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இத்தொகுப்பினல் தெரிந்துகொள்வோம்.

Gratuity Calculator 2025

பணிக்கொடை என்பது ஊழியர்களின் தொடர்ச்சியான சேவையை அங்கீகரித்து அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தொகையாகும். பணிக்கொடை என்பது ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு (PF) இணையாகக் கருதப்படுகிறது.

Gratuity Rules 2025

பணிக்கொடைச் சட்டம், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், தோட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் அல்லது நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

Tap to resize

Gratuity Benefits

அரசு சாரா ஊழியர்களுக்கு பணி நிறைவுற்ற ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாள் ஊதியத்தின் அடிப்படையில் பணிக்கொடை தரவேண்டும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பணிக்கொடை வழங்கலாம். குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் செயல்படும் நிறுவனங்களுக்கு, ஒரு பருவத்திற்கு ஏழு நாள் ஊதியத்தின் அடிப்படையில் பணிக்கொடை கொடுக்க வேண்டும்.

Gratuity Eligibility

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி (DA) அடிப்படை சம்பளத்தில் 50% ஐத் தொடுவதைக் கருத்தில் கொண்டு, பணிக்கொடை உச்சவரம்பு கடந்த ஆண்டு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Gratuity Calculation

கிராஜுவிட்டி கணக்கிடுவதற்கான எளிய சூத்திரம்:

(கடைசி சம்பளம்) x (சேவை ஆண்டுகள்) x (15/26)

கடைசி சம்பளம் என்பதில் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி (DA) மற்றும் கமிஷன் ஆகியவை அடங்கும். ஒரு மாதத்தில் 26 நாள்கள் வேலை நாட்களாகக் கருதப்படுகின்றன. 15 நாள் சம்பளத்தின் அடிப்படையில் பணக்கொடை கணக்கீடு செய்யப்படுகிறது.

Gratuity Amount

எடுத்துக்காட்டாக, கடைசி சம்பளம் ரூ. 30,000 ஆக இருந்தால், 5 ஆண்டுகள் சேவைக் காலத்துக்குப் பின் பணிக்கொடைத் தொகை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்.

கணக்கீடு: ரூ. 30,000 x 5 x (15/26)

மொத்த பணிக்கொடை தொகை: ரூ. 86,538.46

இதே முறையில் கணக்கிட்டால், 7 வருட சேவைக்கு  ரூ. 1,21,153.84, 10 வருட சேவைக்கு ரூ. 1,73,076.92 பணிக்கொடைத் தொகை கிடைக்கும்.

ஒரு நிறுவனம் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் வராதபோதும், ​​தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க முடியும். ஆனால் அதற்கான கணக்கீடு வேறுபடும்.

பணிக்கொடை தொகை = (15 x கடைசி சம்பளத் தொகை x சேவை காலம்) / 30

Gratuity for employees

பணிக்கொடை தொகை பணி ஓய்வு பெறும் ஊழியருக்கு, எதிர்காலப் பாதுகாப்புக்காக ஒரு பெரிய தொகை கிடைப்பதை உறுதிசெய்கிறது. PF போலவே, பணிக்கொடையும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது. கிராஜுவிட்டி தொகைக்கு வரியும் விதிக்கப்படாது.

Gratuity Tax Benefits

ஒரு நிறுவனம் கிராஜுவிட்டி பேமெண்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றால், விதிகள் மாறலாம். ஒவ்வொரு ஆண்டும் மாதச் சம்பளத்தில் பாதிக்கு இணையான தொகை பணிக்கொடையாக வழங்கப்படும். மாதம் 30 நாட்கள் வேலை நாட்களாகக் கருதப்படுகிறது.

Gratuity Payment Act

ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு பணியாளரும் பணிக்கொடையின் பலனைப் பெறலாம். இது தொழிலாளர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அவர்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பும் கிடைக்கிறது.

Latest Videos

click me!