முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் பிரீமியம் செலுத்தும் காலம் 30 நாட்கள். வாடிக்கையாளர்கள் பாலிசி காலத்தை தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பிக்கும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் முதிர்வு காலம் 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள், 60 ஆண்டுகள் ஆகும். உங்கள் வயதுக்கு ஏற்ப பிரீமியத்தை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, ஒருவர் 19 வயதில் ரூ.10 லட்சம் பிரீமியத்தை தேர்வு செய்தால், அவர் 55 வயது வரை மாதம் ரூ.1,515 பிரீமியமாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 50 ரூபாய். அதே.. 58 வயது வரை முதலீடு செய்ய வேண்டும் என்றால்.. மாதம் ரூ.1,463 பிரீமியம் செலுத்த வேண்டும். 60 ஆண்டுகள் வரை பிரீமியமாக ரூ.1,411 செலுத்த வேண்டும்.