Gpay, PhonePe வாடிக்கையாளர்களே உஷார்.. புதிய கட்டண முறை வரப்போகுது.. உடனே நோட் பண்ணுங்க!

First Published | Aug 7, 2024, 1:01 PM IST

ஆன்லைனில் பணம் செலுத்துவதைப் பாதுகாப்பாகச் செய்யும் நோக்கத்துடன் யுபிஐ பின் கடவுச்சொல்லுக்குப் பதிலாக ஃபேஸ் ஸ்கேன் மற்றும் கைரேகை ஸ்கேன் கட்டண முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

UPI Users Alert

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அதாவது என்பிசிஐ (NPCI) ஒரு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது, இதன் கீழ் ஆன்லைன் கட்டணம் முன்பை விட பாதுகாப்பானதாக இருக்கும். இருப்பினும், இது ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, ​​ஆன்லைனில் பணம் செலுத்த, நீங்கள் 4 அல்லது 6 இலக்க PIN கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

Google Pay

ஆனால் இப்போது அது மாறப்போகிறது. தற்போது என்பிசிஐ சில ஸ்டார்ட்அப்களுடன் பேசிவருகிறது. இதனால் PIN கடவுச்சொல்லுக்கு பதிலாக UPI அடிப்படையிலான ஆன்லைன் கட்டணத்தில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை உருவாக்க முடியும். கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி அதாவது ஆர்பிஐ ஓடிபி (OTP) மற்றும் கார்டு பரிவர்த்தனைகளுக்கான புதிய தேர்வுகளைக் கண்டறிய வங்கிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

Tap to resize

PhonePe

இன்றைய காலகட்டத்தில், கார்டு மூலம் பணம் செலுத்த மொபைல் OTP தேவைப்படுகிறது. மேலும், UPI கட்டணத்திற்கு கடவுச்சொற்கள் அவசியம். ஆனால் புதிய மாற்றத்தின் மூலம், பயனர்கள் கைரேகை அல்லது முகத்தை ஸ்கேன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த முடியும். ஐபோன் சாதனத்தைத் திறக்க ஃபேஸ் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விஷயமாகும்.

NPCI

கடவுச்சொல் காரணமாக பல ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ஆன்லைனில் பணம் செலுத்துவது குறித்து கவலை கொண்டுள்ளது. இதுவே வேறு வழிகளைத் தேடுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை என்பிசிஐ தொடங்கியுள்ளது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

Latest Videos

click me!