Google Pay: பண்டிகை காலத்தை முன்னிட்டு கூகுள் பே தனது கஸ்டமர்களுக்கு சூப்பரான கிஃப்ட் ஒன்றை அறிவித்துள்ளது. கூடுதல் ரிவார்டுகளுடன் பல புதிய சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது. இதன் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பண்டிகை காலம் தொடங்கிவிட்டாலே பேங்குகளும், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களும் கஸ்டமர்களுக்கு புதுப்புது ஆஃபர்களை அள்ளி வழங்குவது வழக்கம். அந்த வகையில், கூகுள் பே (Google Pay) இப்போது தனது Flex கிரெடிட் கார்டு ரிவார்டு திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் எஸ்பிஐ கார்டு (SBI Card) உடன் இணைந்து வழங்கப்படும் இந்த Flex கிரெடிட் கார்டின் ரிவார்டு சிஸ்டத்தில் தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய சலுகைகள் 2026 அக்டோபர் 16 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன் மூலம், UPI பேமெண்ட் செய்பவர்களுக்கும், அன்றாட செலவுகளுக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கும் கூடுதல் ரிவார்டுகள் கிடைக்கும்.
24
UPI பேமெண்ட்களுக்கு கூடுதல் ரிவார்டு
Flex கிரெடிட் கார்டு வைத்திருக்கும் கூகுள் ஒன் (Google One) மெம்பர்கள், ஒரு ரிவார்டு சைக்கிளில் 15,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் கூடுதல் சலுகைகளை பெறலாம். கூகுள் ஒன் மெம்பராக இருக்கும் கார்டுதாரர்களுக்கு, தகுதியான செலவுகளுக்கு 3.2 சதவீதம் வரை ரிவார்டு கிடைக்கும். கூகுள் ஒன் மெம்பராக இல்லாதவர்கள் இதே செலவு வரம்பை தாண்டும்போது, தகுதியான பரிவர்த்தனைகளுக்கு 1.6 சதவீதம் ரிவார்டு கிடைக்கும். இந்த ரிவார்டுகள் 'ஸ்டார்' (Star) வடிவில் வழங்கப்படும். ஒரு ஸ்டாரின் மதிப்பு 1 ரூபாய் ஆகும்.
34
உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு எக்ஸ்ட்ரா ரிவார்டு
கூகுள் ஒன் மெம்பர்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதிலும் கூடுதல் சலுகைகள் உள்ளன. ஒவ்வொரு ரிவார்டு சைக்கிளிலும், முன்னணி ஃபுட் மற்றும் க்ரோசரி ஆப்களில் 5,000 ரூபாய் வரையிலான தகுதியான செலவுகளுக்கு 5 சதவீதம் கூடுதல் ரிவார்டு கிடைக்கும். இதுதவிர, கரண்ட் பில், OTT சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு 3,000 ரூபாய் வரையிலான செலவுகளுக்கு 15 சதவீதம் கூடுதல் ரிவார்டு கிடைக்கும். ஆனால், இந்த சலுகைகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கார்டுதாரர்கள் சரிபார்த்துக்கொள்வது நல்லது.
Flex கார்டு யூசர்களுக்கு இன்னொரு குட் நியூஸும் இருக்கு. நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை இந்த திட்டத்திற்கு ரெஃபர் செய்தால் 1,000 ரூபாய் ரிவார்டு பெறலாம். இப்படி எத்தனை பேரை வேண்டுமானாலும் ரெஃபர் செய்யலாம், இதற்கு எந்த லிமிட்டும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் செக் செய்து கொள்ளுங்கள்.
புதிதாக Flex கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கும் வெல்கம் ரிவார்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்டு வாங்கிய முதல் 60 நாட்களுக்குள், நீங்கள் தேர்ந்தெடுத்த கார்டு வேரியண்ட்டை பொறுத்து 2,500 ரூபாய் வரையிலான வெல்கம் சலுகைகளை பெற முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.