இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஹோட்டல்களுக்கான ஆதார் சரிபார்ப்பு முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தனிநபர் தரவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், தகவல் கசிவைத் தடுக்கவும் உதவும்.
ஜோடிகளுக்கும், அடிக்கடி ஹோட்டலில் தங்கும் பயணிகளுக்கும் இது ஒரு முக்கியமான செய்தி, அதுவும் நல்ல செய்தி என்றே கூறலாம். இனிமேல் ஓயோ (OYO) உள்ளிட்ட ஹோட்டல்கள் ஆதார் அட்டையின் நகலை வாங்கவும், அதை கோப்புகளில் சேமிக்கவும் முடியாது. ஆதார் தரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த புதிய விதிமுறையை கொண்டு வருகிறது. இதன் மூலம், தனிநபர் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் பெரிதும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
ஹோட்டல் ஆதார் சரிபார்ப்பு
இந்த புதிய முறையின்படி, ஆதார் சரிபார்ப்பு சேவையைப் பயன்படுத்த விரும்பும் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் முதலில் UIDAI-யில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதார் சரிபார்ப்பு வசதி வழங்கப்படும். UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், இந்த விதி விரைவில் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இதனால், பதிவு செய்யாத ஹோட்டல்கள் ஆதார் விவரங்களை எந்த வடிவிலும் சேகரிக்க முடியாது.
34
ஆதார் நகல் தடை
எதிர்காலத்தில், ஆதார் சரிபார்ப்புக்கு காகித நகல்கள் தேவையில்லை. வாடிக்கையாளர் வழங்கும் QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது புதிய ஆதார் மொபைல் செயலி வழியாகவே விவரங்கள் சரிபார்க்கப்படும். மேலும், API வசதியின் மூலம் ஹோட்டல்கள் தங்களின் உள்ளக மென்பொருள் அமைப்புகளிலேயே ஆதார் சரிபார்ப்பை இணைக்க முடியும். இதனால், சர்வர் சிக்கல்கள் மற்றும் தாமதங்கள் குறையும்.
இந்த செயலி அடிப்படையிலான சரிபார்ப்பு முறை, ஹோட்டல்கள் தவிர விமான நிலையங்கள், வயது சரிபார்ப்பு உள்ளிட்ட கடைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. காகிதமில்லா சரிபார்ப்பு முறையால் ஆதார் தரவு கசிவு அபாயம் குறையும். மேலும், புதிய செயலியின் மூலம் முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்கும் வசதியும் வழங்கப்படும். டிஜிட்டல் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்த புதிய ஆதார் சரிபார்ப்பு அமைப்பு அடுத்த 18 மாதங்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என UIDAI தெரிவித்துள்ளது.