தங்கம், வெள்ளி இரண்டுமே சரிவு.. இப்போ வாங்கினா லாபமா? நிபுணர்கள் அட்வைஸ் இதுதான்

Published : Mar 17, 2026, 03:08 PM IST

உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளன. டாலர் மதிப்பு உயர்வு மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த அச்சம் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

PREV
15
தங்கம் விலை குறைந்தது

உலகளாவிய பதற்றம் அதிகரிக்கும் நேரங்களில் பொதுவாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன. ஆனால் சமீபத்திய வர்த்தக நாளில் இந்த இரண்டின் விலையும் எதிர்பாராத விதமாக சரிந்தது முதலீட்டாளர்களை அதிகப்படுத்தியுள்ளது. வழக்கமாக போர் சூழலில் உயர வேண்டிய விலைகள், இம்முறை மாறுபட்ட பாதையை எடுத்துள்ளன.

25
தங்கம் சரிவு காரணம்

மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ரூ.2,700 முதல் ரூ.3,000 வரை குறைந்தது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.4,000க்கு மேல் சரிந்தது. இந்த வீழ்ச்சி, சந்தையில் தற்காலிக அழுத்தம் நிலவுகிறது என்பதை காட்டுகிறது. முதலீட்டாளர்கள் கவனமாக அணுக வேண்டிய சூழல் இது.

35
சர்வதேச பொருளாதார நிலை

இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக சர்வதேச பொருளாதார நிலை பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூல எண்ணெய் விலை உயர்வு, உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்காமல் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. வட்டி அதிகமாக இருந்தால், முதலீடுகள் குறைந்து சந்தை அமைதியாக மாறும்.

45
டாலர் மதிப்பு உயர்வு

மேலும், டாலர் மதிப்பு உயர்வது தங்கத்தின் தேவை குறைகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் டாலரில் விற்கப்படுவதால், டாலர் வலுப்பெற்றால் தங்கம் வாங்கும் ஆர்வம் குறையும். அதே நேரத்தில், சந்தை அதிர்வுகள் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் பணத்தை காப்பாற்ற தங்கத்தை விற்பதும் விலையை கீழே தள்ளுகிறது.

55
தங்கம் வாங்க நல்ல நேரமா?

இந்நிலையில் நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், பயத்தில் முடிவெடுக்க வேண்டாம் என்பதுதான். குறுகிய கால சரிவுகள் சாதாரணமானவை. நீண்டகால நோக்கில் பார்த்தால், இப்போது தங்கம் மற்றும் வெள்ளியில் படிப்படியாக முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாக இருக்கலாம். ஒரே நேரத்தில் முழு தொகையை முதலீடு செய்வதற்கு பதிலாக, சிறு தொகைகளாக பிரித்து முதலீடு செய்வது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories