Gold Rate Today(September 9): தங்கம் விலை புதிய உச்சம்.! 1 சவரன் தங்கம் ரூ.81,200.! விலை அதிகரிக்க இதுதான் காரணம்.!

Published : Sep 09, 2025, 09:34 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ரூ.10,150 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

PREV
13
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 720 ரூபாய் அதிகரித்து 81,200 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் வெள்ளியின் விலையில் மாற்றம் காணப்படவில்லை. 1 கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

23
விலையேற்றமும் மக்கள் மனசும்.!

துரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 1500 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

33
சர்வதேச காரணங்கள் இதுதான்.!

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் ரூ.81,200-ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன. முதலாவதாக, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள், குறிப்பாக சீனா, ரஷ்யா, இந்தியா போன்றவை தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன. இரண்டாவதாக, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு தங்கத்தின் மதிப்பை உயர்த்துகிறது. டாலரின் மதிப்பு குறைவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது எளிதாகிறது. மூன்றாவதாக, இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் திருமண சீசன் தங்கத்தின் தேவையை அதிகரிக்கின்றன. மேலும், பங்குச் சந்தை சரிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவையும் விலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. இதனால், நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியும் கவலையும் நிலவுகிறது. வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர்

Read more Photos on
click me!

Recommended Stories