உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை சமீப காலங்களில் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரஷ்யா–உக்ரைன் போர், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல், விதித்துள்ள 50% போன்றவை உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இந்திய பொருளாதாரத்திலும் நிலைதடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
25
தங்கம் மீது முதலீடு
இந்த அசாதாரண சூழ்நிலையில், தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கை பலரிடம் வலுப்பெற்றுள்ளது. இதுபற்றி நிபுணர்கள் கூறுவதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏறத்தாழ 1,200% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சங்களை தொட்டுள்ளது.
35
தங்கம் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் எப்போதும் முக்கிய பங்கு வகித்தாலும், சமீபகாலங்களில் தங்கத்துடனான போட்டியில் அதன் வலிமை குறைந்து வருகிறது. மத்திய வங்கிகளின் வெளிநாட்டு இருப்புகளில் 46% பங்கைக் கொண்டிருக்கும் டாலர் தற்போது முதலிடத்தில் இருந்தாலும், அதன் பிடி சற்றுச் சுலபமடைந்து விட்டதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டு மட்டும் தங்கம் 36% உயர்வு கண்டுள்ளது. இவ்வளவு வேகமான வளர்ச்சி, தங்கத்தை சாதாரண நுகர்வோரிலிருந்து பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் கவனிக்க வைக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்திலும் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.
55
தங்கம் விலை இன்று
சென்னையில் தங்கம் விலை இன்று (08 செப்டம்பர்) சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.280 குறைவு பதிவாகியுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி, ஒரு பவுனின் விலை ரூ.79,760 ஆகவும், ஒரு கிராமின் விலை ரூ.9,970 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.