டிமார்ட்டில் மலிவு விலையில் பொருட்கள் கிடைத்தாலும், வாடிக்கையாளர்கள் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். தற்போது டிமார்ட் ஆனது மெட்ரோ நகரங்களிலும், சிறிய நகரங்களிலும் விரிவடைந்து வருகிறது.
டிமார்ட் (DMart) என்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு பிடித்த கடையாக உள்ளது. மலிவு விலையில் தரமான பொருட்களை வழங்குவதால், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்சாதனங்கள் வரை பலரும் இங்கு வாங்க விரும்புகின்றனர். அதனால் எப்போதும் டிமார்ட் கடைகள் கூட்டம் நிறைந்தே காணப்படும். தற்போது மெட்ரோ நகரங்களிலும், சிறிய நகரங்களிலும் விரிவடைந்து வருகிறது. ஆனால் டிமார்ட் செல்லும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன.
25
டிமார்ட் சலுகைகள்
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் டிமார்ட், திருவிழாக்கள் அல்லது சிறப்பு தினங்களில் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சில சமயம் வார இறுதியிலும் சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் அந்த சலுகைகள் வழங்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் பழைய ஸ்டாக்கில் இருந்தவையே ஆகும். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் காஸ்மெடிக்ஸ் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
35
டிமார்ட் ஷாப்பிங்
டிமார்ட் வெறும் மளிகைப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், பிராண்டட் பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது செய்கிறது. சில நேரங்களில், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற பிரபலமான ஆன்லைன் தளங்களை விடவும் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் விலை குறைவு என்பது மட்டும் காரணத்தால் பொருட்களை வாங்காமல், அவற்றின் தரத்தையும் கவனிக்க வேண்டும்.
மற்றொரு முக்கியமான விஷயம் டிமார்ட் ரிட்டர்ன் பாலிசி ஆகும். குறிப்பாக ஆன்லைனில் வாங்கப்படும் சில பொருட்களை திருப்பிக் கொடுக்க முடியாது. அதில் உட்பட, உடைகள் (அண்டர்வேர்), காஸ்மெடிக்ஸ், பிரசனல் கேர் பொருட்கள் ஆகியவை அடங்கும். எனவே இவற்றை வாங்கும் முன், திருப்பிக் கொடுக்க முடியாததை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
55
ஷாப்பிங் டிப்ஸ்
மேலும் சில பொருட்கள் ‘ஸ்டாக் கிடைக்கும் வரை’ மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அவற்றை வாங்கினால் உங்களுக்குத் தேவையான தரம், விலை, மற்றும் ரிட்டர்ன் பாலிசி ஆகியவற்றை முழுமையாக சரிபார்க்காமல் வாங்கக் கூடாது. இல்லையெனில், சிறிய தவறுகள் கூட பெரும் இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.