சென்னையில் இன்று தங்கமும் வெள்ளியும் விலை செம்மையா உயர்ந்திருக்கிறது. இதனால் நகை வாங்க நினைக்கும் பொதுமக்கள் கொஞ்சம் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து, தற்போது ₹11,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் ₹560 உயர்ந்து ₹94,720-ஆகியுள்ளது. வெள்ளியும் பின்னால் போகவில்லை; 1 கிலோ பார் வெள்ளி ₹1,83,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கூட ₹183-க்கு சென்றுவிட்டது. இந்த விலை உயர்வு எல்லாரையும் பாதிக்கிறது.
தங்கம் என்பது நம் நாட்டில் ஒரு சாதாரண நகை மட்டும் இல்லை. அது பாதுகாப்பான முதலீடு. எந்த வீட்டில் திருமணம், விழா, சுப நிகழ்ச்சி என்றாலும் தங்கம் வாங்குவோம். அதனால்தான் விலை உயர்வு வந்தவுடனே, இது எல்லோரையும் பாதிக்கிறது. சிலர் “இப்பவே வாங்கிவிடலாமா?” என்று பயப்படுகிறார்கள். சிலர் “இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்” என்று யோசிக்கிறார்கள். ஆனால் நிலைமை கொஞ்சம் சிரமம் தான். கடந்த சில வாரங்களாக தங்கம், வெள்ளி விலை ஸ்டெடியாகவே உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு சர்வதேச சந்தை, டாலர் விலை, எண்ணெய் விலை, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கிறது.