Gold Rate Today (November 03): இதுதான் இன்றைய தங்கம், வெள்ளி விலை! எப்போது வாங்கலாம் தெரியுமா?

Published : Nov 03, 2025, 10:02 AM IST

வாரத்தின் முதல் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மத்திய வங்கிகளின் முதலீடு, பங்குச் சந்தை சரிவு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் போன்றவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பொருளாதார ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.

PREV
12
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமை தங்கம் விலை சிறிது அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளதால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 350 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 90,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 168 ரூபாயாக உள்ளது. 1 கிலோ பார் வெள்ளி விலை 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

மத்திய வங்கிகள் முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியது, சாதகமற்ற பொருளாதார சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் விலை அதிகரிக்க காரணமாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்

22
காரணம் தெரிஞ்சுக்கலாமே.!

பங்குச் சந்தையின் நிலையும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பங்குச் சந்தை சரிவடைந்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை வாங்கத் தொடங்குவார்கள், இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயரும். அதேசமயம், பங்குச் சந்தை நல்ல நிலைமையில் இருந்தால் தங்கத்தில் முதலீடு குறைந்து விலை தாறுமாறாகக் குறையும். உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளும் பெரிய பங்காற்றுகின்றன. போர், அரசியல் பதட்டம் அல்லது பொருளாதார மந்தம் போன்ற சமயங்களில் மக்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதி வாங்குவதால் விலை திடீரென அதிகரிக்கும்.

இந்தியாவில் தங்கம் ஒரு பாரம்பரிய முதலீட்டாகவும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகவும் இருப்பதால், திருமண காலங்கள், விழாக்கள், தீபாவளி, ஆடி மாதம் போன்ற நேரங்களில் தங்கம் வாங்கும் தேவை அதிகரிக்கும். இதுவும் விலையை உயர்த்தும் ஒரு காரணமாகும். இதேபோல், தேவை குறையும் நாட்களில் விலை குறையும். அதற்குட்பட, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது பிற மத்திய வங்கிகள் தங்கம் வாங்கினால் சந்தையில் தங்கம் குறைந்து விலை உயரும்; அவர்கள் விற்றால் விலை குறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories