போர் பதற்றம்.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?

Published : Mar 06, 2026, 10:40 AM ISTUpdated : Mar 06, 2026, 10:44 AM IST

உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயரக்கூடும்.

PREV
15
போர் பதற்றம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்ந்து 7வது நாளாக நீடிக்கிறது.

25
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்

உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு நாட்களாக சரசரவென சரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.5,240 வரை சரிந்துள்ளது.

35
நகைக் கடைகளில் கூட்டம்

இதன் காரணமாக நகைக் கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா குறைந்ததா என்பதை பார்க்கலாம். நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.15,120க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

45
இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (மார்ச் 06) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,19,680ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,960ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 16,320ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 130,560ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 5 நாட்களில் ரூ.6,520 குறைந்துள்ளது.

55
வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.290,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories