Gold Rate Today (ஜனவரி 03): சந்தோஷம் தந்த தங்கம் விலை.! இப்போது வாங்கலாமா?!

Published : Jan 03, 2026, 09:43 AM IST

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன் நகை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

PREV
14
இன்றைய விலை நிலவரம்

சென்னையில் கடந்த சில நாட்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்றே குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 12,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் 480 ரூபாய் சரிந்து 1,00,160 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது. 

24
இல்லத்தரசிகளுக்கு ஒரு நற்செய்தி

கடந்த சில வாரங்களாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இந்த விலை வீழ்ச்சி நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது. 

34
வெள்ளி விலையிலும் சரிவு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் குறைந்து 256 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,56,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்ற காரணங்களால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தங்கம் விலை ஒரு லட்சத்திற்கும் மேல் நீடிப்பது நடுத்தர வர்க்கத்தினருக்குச் சவாலாகவே உள்ளது. 

44
தங்கத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும்.!

தற்போது விலை சற்று குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் பொங்கல் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள் வருவதால் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும். பொதுவாகத் தேவை அதிகரிக்கும் போது விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதால், திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்கக் காத்திருப்பவர்கள், இந்தச் சிறிய விலை சரிவை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட கால முதலீடாகத் தங்கம் வாங்க விரும்புவோருக்கும் இத்தகைய விலை வீழ்ச்சி தருணங்கள் சாதகமானதாக அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories