Gold Rate Today: மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறதா தங்கம்? இன்றைய அதிரடி மாற்றங்கள்.

Published : Dec 29, 2025, 09:48 AM IST

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, தற்போது சென்னையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சரிந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
15
நிம்மதி தந்த தங்கம் விலை

இந்தியக் குடும்பங்களில் மிக முக்கிய முதலீடாகவும், சுப நிகழ்ச்சிகளின் அடையாளமாகவும் விளங்குவது தங்கம். கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாகச் சரிந்துள்ளது.

25
இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13,020 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலையில் 640 ரூபாய் சரிவு ஏற்பட்டு, 1,04,160 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

35
தங்கத்துக்கு கம்பெனி கொடுத்த வெள்ளி

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் குறைந்து 281 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2,81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை வீழ்ச்சி நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45
சர்வதேச நிலவரங்கள் இதுதான்.!

இந்த விலை சரிவுக்கான முக்கிய காரணங்களாக சர்வதேச சந்தை நிலவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக, உலகளாவிய பொருளாதாரச் சூழலில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு மாற்றாக மற்ற பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்துவதும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களும் இந்திய சந்தையில் தங்கத்தின் விலையை நேரடியாகப் பாதிக்கின்றன. 

55
தெரிஞ்சுக்கோங்க மக்களே.!

பங்குச்சந்தைகளில் நிலவும் சில சாதகமான சூழல்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து லாபத்தைப் பதிவு செய்வதும் இந்த விலை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories