சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ.9275க்கும், சவரன் ரூ.74,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமில்லாமல் கிராம் ரூ.127க்கு விற்பனையாகிறது.
வாரத்தின் முதல் நாளில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரிக்க வில்லை. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆபரண தங்கம் விலை அதிகரிக்காததால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படவில்லை.
23
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.9275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 74,200 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 127 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
33
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.