Published : Jun 20, 2025, 10:44 AM ISTUpdated : Jun 20, 2025, 10:45 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் எதிர்பார்த்தபடியே சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சரிவடைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.திருமணங்கள், விழாக்கள், முதலீடு என பல்வேறு காரணங்களுக்காக பொது மக்கள் தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறார்கள். இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 20, 2025) தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது மக்களுக்கு சிறு நிம்மதியைக் கொடுக்கிறது.
25
தற்போதைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.73,680 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு 55 ரூபாய் சரிவடைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9,210 ஆக உள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூாபாய் குறைந்து ஒரு கிராமுக்கு வெள்ளி ரூ.120 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை குறைவு, கடந்த சில நாட்களில் நிலவிய சிறிய அளவிலான ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிறகு நடந்துள்ளது. வாடிக்கையாளர்கள், குறிப்பாக திருமண பருவம் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.
35
கடந்த வார விலை நிலவரம்
ஒரு வாரத்துக்கு முன்னர், சவரன் தங்கத்தின் விலை ரூ.74,800 ஆக இருந்தது. அதாவது, ஒரு வாரத்துக்குள் சுமார் ரூ.1,120 விலை குறைந்திருக்கிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை கடந்த வாரம் ரூ.9,350 ஆக இருந்தது. வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து ரூ.120 என்ற அளவிலேயே நிலைத்து உள்ளது. இந்த விலை மாற்றங்கள், சர்வதேச சந்தையில் உள்ள நிலைமைகள், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மத்திய வங்கி கொள்கைகள், மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தக வரிகள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன.
விலை குறைந்த செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக நகைக்கடைகள், தங்கள் விற்பனையை ஊக்குவிக்க தங்க நகை வாங்குவோருக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. வணிக வல்லுநர்களின் கூற்றுப்படி, இது தற்காலிகமான விலை வீழ்ச்சியாக இருக்கலாம் என்வும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடிய சாத்தியம் இருப்பதால், தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல தருணமாகவும் பார்க்கப்படுகிறது.
55
தங்கம் எனும் பாதுகாப்பான முதலீடு
தங்கம் என்பது எப்போதும் நிலையான முதலீடாகவே இருக்கிறது. விலைகளில் ஏற்படும் குறுகியகால மாற்றங்கள் பொதுவானவை. ஆனால் நீண்டகால அடிப்படையில், தங்கத்தின் மதிப்பு உயர்வு நோக்கத்தில் செல்லும் என்பதே நிபுணர்களின் அறிவுரை.அதனால், சென்னையில் தற்போது உள்ள ரூ.73,680 என்ற விலை, கடந்த வாரத்தின் விலையை விட குறைவாகவே இருப்பதால், இது வாங்க வேண்டிய நேரமா என மக்கள் பரிசீலித்து வருகின்றனர். தற்போதைய சூழலில், தங்கம் வாங்கும் முன் விலை நிலவரத்தை அடிக்கடி கவனிப்பதும், தேவைக்கேற்ப செயல்படுவதும் நன்மையாக இருக்கும்.