கதறும் நகைப்பிரியர்கள்.! புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.?

Published : Jan 30, 2025, 09:47 AM ISTUpdated : Jan 30, 2025, 11:29 AM IST

சர்வதேச சந்தை மற்றும் அதிகரித்த முதலீடுகள் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எதிர்கொண்டுள்ளது. ஒரு சவரன் 61,000 ரூபாயை நெருங்கியுள்ளதால் நடுத்தர மக்கள் கவலையில் உள்ளனர். 

PREV
15
கதறும் நகைப்பிரியர்கள்.! புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.?
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் தொடக்கமே நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது.  தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரன் 61ஆயிரத்தை தொடவுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

25
தங்கத்தின் மீதான ஈர்ப்பு

மற்ற நாடுகளை விட இந்திய மக்களே அதிகளவில் தங்கத்தை வாங்குகிறார்கள். தங்கத்தின் மீதான ஈர்ப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்தை அணிய மக்கள் விருப்புவார்கள்.

எனவே தங்கம் விலை உயர்வை சந்தித்தாலும் உயர்வகுப்பு மக்கள் தங்கத்தை தொடர்ந்து வாங்குகிறார்கள். மேலும் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காகவும், திருமணத்தில் பெண் குழந்தைகளுக்கு நகைகளை அணிவிப்பதற்காகவும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

35
தங்கத்தின் மீதான முதலீடு

அமெரிக்கப் பங்குச்சந்தை மோசமான சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில் பெரும் பகுதி முதலீடுகள் தற்போது தங்கம் மீது திரும்பியுள்ளது, இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது தங்கத்தின் மீதான வரி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

45
ஜெட் வேகத்தில் தங்கம் விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக குறைந்த நிலையில் நேற்று திடீரென உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 7,595 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 60ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 

55
இ்ன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 610 ரூபாய்க்கும்,  ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 60ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் 61ஆயிரத்தை கடக்கும் நிலை உருவாகியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories