ஒரே நாளில் சரசரவென குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி

தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold rate today : தங்கத்தின் மீதான ஆர்வம் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடமே அதிகமாக உள்ளது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்க நகைகளை அணிய இந்திய பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள். இதனாலேயே இந்தியாவில் அதிகளவு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு தங்கம் முக்கிய பயன்பாடாக உள்ளது.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு உடனடியாக தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும். இதன் காரணமாகவே தங்கத்தை வாங்க மக்கள் விருப்பப்படுவார்கள். இந்தநிலையில் தான் தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் நாள் தோறும் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

கடந்த 2 மாதங்களில் மட்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரனுக்கு 10ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. இதனால் திருமணம் மற்றும் விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அடைந்தனர். 


நேற்றும் அதிகரித்த தங்கம் விலை

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்றும் அதிகரித்திருந்தது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்பனையானது. அதேபோல்,  கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்று சரிவை சந்தித்த தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. அந்த வகையில், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்து 67ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென குறைந்த தங்கம் விலை காரணதாக நகைப்பிரியர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள். 

Latest Videos

click me!