Today Gold Rate in Chennai : தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் மளமளவென குறைந்திருக்கும் நிலையில், அதன் இன்றைய விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
பெண்கள் விரும்பி வாங்கும் ஆபரணங்களில் தங்கமும் ஒன்று. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கம் விற்பனை செய்யும் மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தங்கம் விலை அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெண்களுக்கு குறைவதில்லை. பண்டிகை காலங்களில் தங்கத்தை பெண்கள் அதிகம் வாங்க முனைப்பு காட்டுவார்கள். அந்த வகையில் தற்போது தீபாவளி வருவதால் தங்கம் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது.
24
Today Gold Rate in Chennai
தங்கத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதன் விலையும் கூடி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை மளமளவென உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை சட்டென குறைந்து இருக்கிறது. நேற்றையை விலையை விட இன்று தங்கம் விலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரணுக்கு 440 ரூபாய் குறைந்து ரூ.58 ஆயிரத்து 280க்கும் விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.7 ஆயிரத்து 340க்கும் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 720க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
44
Gold Rate on October 24
தீபாவளி பண்டிகையையொட்டி நகை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த நகை விலை குறைப்பு உற்சாகம் தரும் செய்தியாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.