அதிரடி விலை உயர்வு
அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியதால் முதலீடு பங்குப்பத்திரிங்களில் திரும்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது
எதிர்பார்ப்பு பொய்யானது
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் கிராமுக்கு 90 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,415ஆகவும், சவரன், ரூ.42,704ஆகவும் இருந்தது.
வரலாற்று உச்சம்
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 90ரூபாய் உயர்ந்து ரூ.5,505ஆகவும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 040 ஆக அதிகரித்துள்ளது.
மிடில் கிளாக் மக்கள் கலக்கம்
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.167 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1336 அதிகரித்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையும் தப்பவி்ல்லை
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.76.00 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, ரூ.77.80ஆகவும், கிலோவுக்கு 800 அதிகரித்து ரூ.77,800 ஆகவும் உயர்ந்துள்ளது