இன்றைய தங்கம் விலை என்ன.?
இந்த நிலையில் தங்கம் விலை குறைவிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா தேர்தல் முடிவுகள், கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரிப்பு, அமெரிக்க டாலர் குறியீடு, அமெரிக்க பங்குச் சந்தைகளின் ஏற்றம், அதிகரிக்கும் பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கம் விலை தற்போது குறைந்து வருவதற்கான காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் இருக்கு பத்து ரூபாய் அதிகரித்துள்ளது அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் 6,945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்து 55,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது