ஷாக் கொடுத்த தங்கம் விலை.! ஒரே நாளில் கிடு கிடுவென உயர்வு- ஒரு சவரன் விலை இவ்வளவா.?

First Published | Oct 29, 2024, 11:29 AM IST

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து, சேமிப்பாகவும் முதலீடாகவும் தங்கத்தைப் பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது. 

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேமிப்பு பொருளாக தங்கத்தை மக்கள் பார்க்கிறார்கள். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்வது மக்களின் விருப்பமாக உள்ளது. இரண்டிலும் முதலீடு செய்வதன் மூலம் எந்த வித நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. இதனை கருத்தில் கொண்டே உயர் வகுப்பு மக்கள் முதல் நடுத்தர வர்க்க மக்கள் வரை தங்கத்தை சேமித்து வருகின்றனர்.

தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தங்கம் ஒரு சேமிப்பு பொருளாக பார்க்கின்றனர். அத்தியாவசிய தேவைக்கு தங்கத்தை எளியில் விற்கவும் முடியும், அடகு வைக்கவும் எனவே தான் தங்கம் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

Gold price today

தீபாவளி பண்டிகை- உயரும் தங்கம் விலை

அந்த வகையில் விஷேச நாட்களையொட்டி இந்திய மக்கள் தங்கத்தை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு  300 முதல் 500 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரித்தால் அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் 300 ரூபாய் குறைகிறது.

இதே போன்ற நிலைமை தான் கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 49 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்த தங்கம் விலை இன்று 60 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்துள்ளது. 

Tap to resize

gold Jewels

ஒரு கிராம் தங்கம் விலை என்ன.?

சென்னையில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் 7,375 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது 7,315 ரூபாயாக இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம ஒன்றுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுவே 22 கிராம் தங்க நகை பொருத்தவரை சவரன் ஒன்றுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 58,520 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 59 ஆயிரம் ரூபாய் ஒரு சவரன் தங்கமானது எட்டியுள்ளது.  

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

இதே போல 24 கேரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 520 ரூபாயும் கிராமுக்கு 65 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக பலவீனமடைந்து வருவதால்  தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதாலும் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் தொடர்ந்து உயரக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!