இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில் தங்கத் தேவையும் இயல்பாக அதிகரித்துள்ளது. நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், திருமண காலங்கள் போன்ற நிகழ்வுகள் நெருங்கி வரும் சூழலில் நகைக்கடைகளில் அதிகளவு தேவை உருவாகியுள்ளது. இந்த கூடுதல் தேவை விலையை மேலும் தூக்கி நிறுத்தியுள்ளது.
வெள்ளி விலையும் விலக்கு இல்லை. வெள்ளி தொழில்துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சோலார் பேனல், எலெக்ட்ரானிக்ஸ், மருத்துவ உபகரணங்கள் போன்ற துறைகளில் அதன் தேவை தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது, மாற்று முதலீடாக பொதுமக்கள் வெள்ளியை நாடுவதும் விலையை உயர்த்தும் காரணமாக இருக்கிறது. மேலும், சர்வதேச கமாடிட்டி சந்தையிலும் வெள்ளி விலை உயர்வதை இந்திய சந்தை நேரடியாக உணர்கிறது.
மொத்தத்தில், தங்கமும் வெள்ளியும் விலை உயர்வுக்குக் காரணமாக உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, முதலீட்டு சாய்வு, பண்டிகை-திருமண கால தேவை, தொழில்துறை பயன்பாடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வரவிருக்கும் தீபாவளி மற்றும் திருமண காலங்களில் விலை மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது.