தங்கம் விலை சரிவு தொடர்கிறது. அமெரிக்க வட்டி விகிதம், உலக சந்தை நிலவரம், நுகர்வோர் எதிர்பார்ப்பு போன்ற காரணிகள் இதற்கு காரணம். முதலீட்டாளர்கள் தங்க நாணயங்கள் அல்லது ETFகளில் முதலீடு செய்யலாம்.
தங்கம் விலை இந்திய சந்தையில் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ₹1,000–₹1,200 வரை விலை குறைந்துள்ளது. இது நகை வாங்க விரும்பும் பொதுமக்களுக்கு சந்தோசத்தைத் தந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடருமா என்பதையும், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
26
சரிவுக்கு பின்னால் என்ன காரணங்கள்?
அமெரிக்க வட்டிவிகிதம்:
அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. வட்டி விகிதம் அதிகரிக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, பத்திரங்களை தேர்வு செய்கிறார்கள். இது தங்கத்தின் மீது உள்ள தேவை குறைந்து விலையை கீழே தள்ளுகிறது.
உலக சந்தை நிலவரம்:
சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாவதால் அச்சமோடு முதலீட்டாளர்கள் இருப்பதை எதிர்பார்த்தாலும், தங்கம் மீது அதிக நம்பிக்கை காணப்படவில்லை. அதேசமயம், டாலரின் மதிப்பு வலுப்பெறுவதும் தங்க விலைக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பொதுவாக டிரம்ப் பட்டாசு வெடித்து போரை நிறுத்தியதால் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மக்கள் தங்கம் வாங்கி தீபாவளியை கொண்டாடி வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நுகர்வோர் எதிர்பார்ப்பு
“இன்னும் விலை குறையும்” என பொதுமக்கள் எதிர்பார்க்கிறதால் நகை கடைகளில் கொள்முதல் தாமதமாகிறது. இதுவும் சந்தையில் விற்பனை அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
36
வணிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
தங்கம் விலை தொடர்ந்து குறைவதால், வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று எண்ணுகிறார்கள் எனவும் ஆனால் இதே போல பலரின் எதிர்பார்ப்பு இன்னும் சில நாட்களில் விலை மேலும் குறையக்கூடும் என்பதாகவே உள்ளது என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்க நாணயங்களில் முதலீடு செய்யும் தருணம் இது. நேரடி நகை வாங்கும்போது கூடுதல் கட்டணங்கள் செலவாகும். ஆனால் தங்க நாணயங்கள் அல்லது ETF-கள் இவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
56
தங்கம் விலை இன்னும் கீழே செல்ல வாய்ப்பு இருக்கிறதா?
நிபுணர்கள் சிலர் அதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறார்கள். வட்டி விகிதம் உயர்வும், சர்வதேச பொருளாதார நெருக்கடியும் இணைந்து, தங்கத்தின் மீதான தேவை குறைய வாய்ப்பு இருக்கிறது. தங்கத்தின் விலை குறைவது ஒரு சைக்கிளாகவே உள்ளது என்றும் தற்போது நடைபெறும் சரிவானது பன்னாட்டு வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இது ஒரு நெடுங்கால பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலு் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
66
தங்கம் வாங்கும் குடும்பங்களுக்கு பரிந்துரை
திருமணங்கள், வைபவங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போது நிதானமாக வாங்க ஆரம்பிக்கலாம்.விலை மேலும் குறையக்கூடிய சாத்தியம் இருப்பதால், முழுமையான கொள்முதல் தவிர்த்து, பகுதியாக வாங்குவது நன்மை தரும்.பரிசுத்த திட்டங்களை தவிர்த்து நேரடி கொள்முதல் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
இப்படி செய்தால் லாபம்
தங்கம் விலை தற்போது சரிவில் இருப்பது உண்மை. பொதுமக்கள் அதிரடி முடிவுகள் எடுக்காமல், சந்தையை அவதானித்து, திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். விலை மீண்டும் உயரக்கூடிய சாத்தியமும் உள்ளது. எனவே இப்போதைய விலை சரிவை புத்திசாலித்தனமான பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.