தங்கம் விலை சவரன் 1 லட்ச ரூபாயைத் தொட்டதற்குக் சர்வதேச அளவிலான பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:
புவிசார் அரசியல் பதற்றங்கள்
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் மற்றும் உக்ரைன் போர்ச் சூழல் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதும், வரும் காலங்களில் மேலும் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பைக் குறைத்து தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளது.
மத்திய வங்கிகளின் கையிருப்பு
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பில் தங்கத்தின் அளவை அதிகப்படுத்தி வருவது சர்வதேச சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்தியுள்ளது.
தேவை அதிகரிப்பு: இந்தியாவில் தற்போது திருமண சீசன் மற்றும் பண்டிகைக் காலம் என்பதால், ஆபரணத் தங்கத்தின் தேவை உள்ளூர் சந்தையிலும் அதிகரித்துள்ளது.